உளுந்தூர்பேட்டையில் ரூ.1.47 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகும் அவலம்
27 Jun 2026, 12:24 am

உளுந்தூர்பேட்டையில் ரூ.1.47 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகும் அவலம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 26- உளுந்தூர்பேட்டை நகராட்சியில், சுமார் ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை, பயன்பாட்டிற்கு வராமல் நீண்ட நாட்களாக வீணாகி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உளுந்தூர்பேட்டை சேலம் சாலை யில் உள்ள சுடுகாட்டில், விறகு கட்டை களைக்கொண்டு உடல்களை எரியூட்டுவ தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகக் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.1.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் ரோடு சுடுகாடு அருகே தகன மேடைக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கான மின்சாதனங்கள் மற்றும் மோட்டார்களும் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

பராமரிப்பு இன்றி வீணாகும் கட்டடம்

இருப்பினும், இந்தத் தகன மேடையைப் பராமரித்து இயக்குவதற்கு எந்தவொரு தொண்டு நிறுவனமும் முன்வராததால், கட்டடம் இன்றுவரை பயன்பாட்டிற்கு வரா மலேயே உள்ளது. நீண்ட காலமாகப் பரா மரிப்பின்றி உள்ளதால், வளாகம் முழுவதும் முட்செடிகள் மண்டி, கட்ட டம் சிதிலமடைந்து வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ரூ.1.47 கோடி மதிப்புள்ள பொதுச் சொத்து, இவ்வாறு பயன்பாடின்றி வீணாவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடி யாக இதில் தலையிட்டு, எரிவாயு தகன மேடையை முறையாகப் பராமரிக்கத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக இதைக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.