உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் வசந்தவேலு சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் வசந்தவேலு சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, மார்ச் 31- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக ஜி.ஆர். வசந்தவேலு போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலை யில், திங்களன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள சிபிஎம் நகர அலுவலகத்திற்கு வேட்பாளர் வசந்தவேலு நேரில் வருகை தந்தார். அங்கு கூடியிருந்த சிபிஎம் தலை வர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து, நடைபெறவுள்ள தேர்தலில் தனக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிபிஎம் தோழர்களுக்கு வேட்பாளர் வசந்தவேலு மற்றும் திமுகவினர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது. திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முழு ஒத்துழைப்பு தருவதாக சிபிஎம் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். தலைவர்கள் பங்கேற்பு இந்த ஆதரவு கோரும் நிகழ்வில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆறு முகம், பி.சேகர், செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். செல்வராஜ், நகரக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், ஷேக்சலாவுதீன், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், கே.ஆனந்தராஜ், வேலா.பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
