25 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி! உளுந்தூர்பேட்டையில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்!
21 Jul 2026, 12:02 am
<p><strong>25 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி! உளுந்தூர்பேட்டையில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்!</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், பு.மலைய னூர் கிராமத்தில் 65 ஆண்டுகளாகக் குடி யிருந்து வரும் 25 குடும் பங்களை வெளி யேற்றும் முயற்சியைக் கண்டித்து, சிபிஎம் மற்றும் ஊர்ப் பொது மக்கள் சார்பில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு குண்டான் சட்டிகளுடன் குடும்பத் தோடு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், பு.மலை யனூர் கிராமத்தில் 65 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் 25 ஏழைக் குடும்பங்களை அரசு அதிகாரிகள் வெளி யேற்ற முயற்சி செய்வதை கண்டித்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே வீடுகளை இடித்துத் தள்ள நினைக்கும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலு வலர் ஆகியோரின் நட வடிக்கையைக் கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப் பட்டது. மேலும், மாற்று இடம் என்ற பெயரில் நடுகாட்டின் மையப்பகுதியில், வன விலங்குகள் நடமாடும் இடத்தில் பட்டா கொடுக்கும் அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தியும், 65 ஆண்டுகளாகக் குடி யிருந்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு நில வகை மாற்றம் செய்து உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என வும், பாதுகாப்பற்ற காட்டுப் பகுதியில் மக்களைக் குடியேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வும் கோரிக்கை விடுக்கப் பட்டது. போராட்டத்தின் முடி வில், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, “பு.மலையனூர் கிராமத்தில் வீடுகளை இடிக்கும் பணியானது நிறுத்தி வைக்கப்படுகிறது” என்ற தகவலைத் தெரிவித்ததன் அடிப்படையில், இப்போரா ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்குச் சிபிஎம் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியச் செய லாளர் வி. ரகுராமன் தலைமை தாங்கினார். சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் க. சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். ராஜேஷ், வாழ்வுரிமைக் கட்சி இளைஞர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர். கலைமணி, வழக்கறிஞர் பி. ராம்குமார், புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் எஸ். பூவையர், புரட்சி பார தம் மாவட்டச் செயலாளர் கே. ஏழுமலை, பு.மலைய னூர் ஊராட்சி மன்றத் தலை வர் கே. பாலு, ஜெயமூர்த்தி, பச்சையப்பன், செல்வராஜ், ரங்கதுரை, மாறன், முக மது ரபீக், ஐயப்பன், கிளைச் செயலாளர்கள் ராஜகோபால், கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகளும், பு.மலையனூர் கிரா மத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோ ரும் இக்காத்தி ருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
