தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி அவலம்

29 Oct 2026, 11:46 pm
உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி முன்பு  மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி அவலம்
<p><strong>உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி அவலம்</strong></p><p>உளுந்தூர்பேட்டை,அக்.30-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே திரு நாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டூர் ஊராட்சி யில் அங்கன்வாடி மையம்முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி நிற்ப தால் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த அங்கன்வாடி மையத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என 115 பயனாளிகள் வந்துசெல்கின்றனர். அங்கன் வாடி வாசலிலேயே கழிவுநீர்தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p>இது குறித்து பலமுறை புகார் அளித்தும்நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உட னடியாக கள ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்குவதை தடுத்து, அங்கன் வாடி மையத்தை சுகாதாரமான முறையில் பரா மரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.