தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை அருகே 7 மாடுகள் திருட்டு காவல் துறையின் மெத்தனத்திற்கு சிபிஎம் கண்டனம்

6 Jul 2026, 10:49 pm
உளுந்தூர்பேட்டை அருகே 7 மாடுகள் திருட்டு காவல் துறையின் மெத்தனத்திற்கு சிபிஎம் கண்டனம்
<p><strong>உளுந்தூர்பேட்டை அருகே 7 மாடுகள் திருட்டு காவல் துறையின் மெத்தனத்திற்கு சிபிஎம் கண்டனம்</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 6- உளுந்தூர்பேட்டை வட்டம், பின்னல்வாடி கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த 7 பசு மாடுகளை மர்ம நபர்கள் லாரியில் கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எலவனாசூர்கோட்டை பகுதிகளில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பின்னல்வாடி ஏரிப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த விவசாயிகளுக்குச் சொந்த மான 7 மாடுகளை மர்ம நபர்கள் லாரி மூலம் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திருட்டுச் சம்பவத்தைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் சிபிஎம் விடுத்துள்ள கோரிக்கைகள் வருமாறு: குற்றவாளிகளைக் கைது செய்க: ஏரியில் மேய்ந்த மாடுகளை லாரியில் திருடிச் சென்ற கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை: மாடு திருடர்களுக்குத் துணை போகும் எல வனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்டு ஒப்படைத்தல்: திருடப் பட்ட மாடுகளைக் கண்டுபிடித்து உரிய வர்களிடம் ஒப்படைக்க வேண்டும். “தமிழக அரசும், மாவட்டக் காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்றும் அந்தச் சுவரொட்டி யில் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.