மின்சார வாகன நிறுவனத்தின் ரூ.200 கோடி முதலீடு சென்னையில் விரிவாக்கத் திட்டம்!
14 Jun 2026, 12:59 am

மின்சார வாகன நிறுவனத்தின் ரூ.200 கோடி முதலீடு சென்னையில் விரிவாக்கத் திட்டம்!

சென்னை,ஜூன் 13- எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகக் கவலைகளால் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ‘அல்ட்ராவயலெட்’ நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தை வாகன உற்பத்தியின் முக்கிய மையமாகக் கருதும் இந்நிறுவனம், சென்னையில் புதிய உற்பத்தித் தளம் அமைப்பது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது விரிவாக்கத்திற்காக ரூ. 200 கோடியை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இதனை நிறுவனர் நிரஜ் ராஜ்மோகன் கூறினார்.

கர்நாடகாவில் ஏற்கனவே தனது உற்பத்தித் திறனை 60,000 வாகனங்களாக உயர்த்தியுள்ள இந்நிறுவனம், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை 2.5 லட்சம் அலகுகளாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது. தற்போது 40 நாடுகளில் அங்கீகாரம் பெற்று 19 சந்தைகளில் செயல்படும் அல்ட்ராவயலெட், லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கால்பதிக்கத் தயாராகி வருகிறது.

, 2028-ஆம் நிதியாண்டிற்குள் மாதத்திற்கு 20,000 வாகனங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. எரிபொருள் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிகக் குறைவு என்பதால், இத்துறையின் வளர்ச்சி இந்தியச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.