இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி தாடிபத்ரி அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்:
16 May 2026, 9:50 pm

இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி தாடிபத்ரி அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்:

12 மணி நேரச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

வேலைநிறுத்தம் 19

அனந்தபூர், மே 16- ஆந்திர மாநிலத்தின் தொழில் துறை மண்டலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் அசுர லாபத்தி ற்குப் பின்னால், ஒப்பந்தத் தொழிலா ளர்களின் கடுமையான உழைப்புச் சுரண்டல் ஒளிந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தின் தாடிபத்ரி (Tadipatri) அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில், புலம்பெயர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்திய போராட்டம் இதனை மீண்டும் நிரூபித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளுக்குச் சாதக மாக மாற்றப்பட்ட சூழலில், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தொழி லாளர்கள் நடத்திய இந்தப் போ ராட்டத்தை இத்தொடரின் 19-ஆவது பகுதியில் விரிவாகக் காண்போம்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் போகசமுத்திரம் (Bhoga samudram) கிராமத்தில் அமைந் துள்ள அல்ட்ராடெக் நிறுவனத்தின் ‘ஆந்திர பிரதேஷ் சிமெண்ட் ஒர்க்ஸ்’ ஆலையில் கடந்த மார்ச் 17, 2026 அன்று தொழிலாளர்களின் தன்னிச் சையான வேலைநிறுத்தப் போ ராட்டம் தொடங்கியது. சட்டப்பூர்வ மான 8 மணி நேர வேலை மற்றும் கூடுதல் நேர உழைப்பிற்கான இரட்டி ப்பு ஊதியம் ஆகிய கோரிக்கை களை முன்வைத்து, நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டு அதிரடி தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் வேலை நிறுத்தம் ஆலையின் உற்பத்தியைப் பகுதியளவு முடக்கியது.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையும் சுரண்டலும்

ஆண்டுக்கு 65 லட்சம் முதல் 1 கோடி டன் வரை சிமெண்ட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த மாபெரும் ஒருங்கிணைந்த ஆலையின் தினசரி இயக்கங்கள் முற்றிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நம்பியே உள்ளன. இங்கு சுமார் 800 முதல் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

இத்தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு வெறும் 12,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே ஊதிய மாக வழங்கப்படுகிறது. தற்போ தைய கடுமையான விலைவாசி உயர்வுக்கு இந்தத் தொகை குடும்பத்தை நடத்தவோ அல்லது சொந்த ஊருக்குப் பணம் அனுப்ப வோ போதுமானதாக இல்லை. மேலும், 8 மணி நேர வேலை என்ற சட்ட விதியை முற்றிலும் மீறி, தின மும் 10 முதல் 12 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால், இந்த கூடுதல் நேர வேலை க்கு (Overtime) ஒற்றை வீத ஊதி யமே வழங்கப்படுகிறது அல்லது முற்றிலும் மறுக்கப்படுகிறது. இதோடு, பிஎப், காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு பலன்கள் முறை யாக வழங்கப்படுவதில்லை என்பது டன், முறையான ஊதியப் பட்டியலோ (Pay slip) தொழிலாளர்களுக்குத் தரப்படுவதில்லை.

8 மணி நேர வேலையை வலியுறுத்தி வெடித்த போராட்டம்

இத்தகைய தொடர் அநீதிகளால் பொறுமையிழந்த தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டு கேட் கூட் டங்கள், வேலைநிறுத்தம் மற்றும் அமைதியான தர்ணாக்களை நடத்தி னர். ஒழுங்குபடுத்தப்பட்ட வேலை நேரத்தையும் நியாயமான கூடுதல் நேர இழப்பீட்டையும் கோரி தொழி லாளர்கள் முழக்கமிடும் வீடியோக் கள் சமூக ஊடகங்களில் பரவின.

வேலை நேரத்தைச் சட்டப்படி 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும், கூடுதல் நேர வேலை க்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும், மற்றும் தகுந்த பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் முக்கி யக் கோரிக்கைகளாக இருந்தன.

ஒப்பந்தக்காரர்களை முன்னிறுத்திய நிர்வாகத்தின் சூழ்ச்சி

போராட்டம் வெடித்தவுடன், அல்ட்ராடெக் ஆலை மேலாண்மை தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டது. தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் நோக்கில், இடைத்தரகர்களான ஒப்பந்ததாரர்க ளை முன்னிறுத்தியே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. சட்டப்பூர்வ தேவைகள் அனைத்தும் பின்பற்றப் படுவதாக நிர்வாகம் வாதிட்டது.

அரசு நிர்வாகமும் உள்ளூர் அதி காரிகளும் சட்டம் ஒழுங்கைப் பரா மரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தி யைத் தொடங்க அழுத்தம் கொ டுத்தனரே தவிர, தொழிலா ளர்களுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

2025-2026 காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், முதலாளிகள் தங்களுக்குச் சாதக மாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பெரும் வழிவகை செய்துள்ளன. தொ ழிற்சங்கங்களை அமைப்பதற்கான வரம்புகள் உயர்த்தப்பட்டதாலும், வேலை நேரத்தைக் கணக்கி டுவதில் முதலாளிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டதாலும் தொழிலா ளர்களின் கூட்டுப் பேரம் பேசும் சக்தி நசுக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் போன்ற அதிக லாபம் ஈட்டும் துறையி லும் கூட இது புலம்பெயர் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பற்றதாக்கியுள்ளது.

பகுதியளவு வெற்றியும் தற்காலிக வாபசும்

ஆலை நிர்வாகத்தின் பிடிவாதம், உள்ளூர் நிர்வாகத்தின் அழுத்தம் மற்றும் தொழிலாளர்களின் தொடர் சோர்வு காரணமாக, கூடுதல் நேர ஊதியம் மற்றும் ஷிஃப்ட் நேர சீரமைப்பு உள்ளிட்ட சில கோரிக்கை களுக்குப் பகுதியளவு உடன்பாடு எட்டப்பட்டது. பழிவாங்கும் நடவ டிக்கைகள் இருக்காது என்ற உத்தர வாதத்தின் பேரில், ஏப்ரல் தொடக்கத்தில் ஆலை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இருப்பினும், மத்தியப் பிரதே சத்தின் ரேவா, ஜார்க்கண்டின் பத்ராது, ஆந்திராவின் பெட்னி கோட்டா ஆகிய இடங்களில் உள்ள அல்ட்ராடெக் ஆலைகளிலும் இதே காலகட்டத்தில் போராட்டங்கள் வெடித்தன. சமூக ஊடகங்கள் வழி யாக ஒன்றிணைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தத் தன் னிச்சையான எழுச்சி, இந்திய சிமெண்ட் துறையில் நிலவும் உழைப்புச் சுரண்டலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. (லெப்ட் வியூஸ்)