தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்னிகோட்டா அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்

18 May 2026, 9:42 pm
பெட்னிகோட்டா அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்

பெட்னிகோட்டா அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்

12 மணி நேரச் சுரண்டலை எதிர்த்து புலம்பெயர் தொழிலாளர் பேரணி

வேலைநிறுத்தம் 23

நந்தியால், மே 18- ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்ப்ப ரேட் சிமெண்ட் ஆலையான அல்ட்ரா டெக் பெட்னிகோட்டா பிரிவில், ஒப்பந்த மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உழைப்பு உரிமைக்காக நடத்திய வீரம்செறிந்த போராட்டம், இந்தியத் தொழில்துறை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஒன்றிய, மாநில அரசு களின் புதிய தொழிலாளர் கொள்கை கள் முதலாளித்துவத்திற்கு ஆதர வாக மாற்றப்பட்ட போதிலும், சமூக ஊடகங்களின் துணையோடு தொழி லாளர்கள் தன்னிச்சையாகத் திரண்டு நடத்திய இந்த வேலைநிறுத்தம் கார்ப்ப ரேட் நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இத்தொடரின் 23-ஆவது பகுதியில், இந்தத் தீரமிக்க போரா ட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் (முன்னாள் கர்நூல் மாவட் டம்) கொலிமிகுண்ட்லா (Kolimigu ndla) அருகே அமைந்துள்ள ஆதித்யா பிர்லா குழுமத்திற்குச் சொந்தமான ‘அல்ட்ராடெக் பெட்னிகோட்டா சிமெண்ட் ஒர்க்ஸ்’ (Petnikota Cement Works) ஆலையில், கடந்த 2026 மார்ச் மாத மத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தன்னிச்சையான மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. 8 மணி நேர வேலை மற்றும் முறையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டு உற்பத்தி யை அதிரடியாக முடக்கினர்.

புலம்பெயர் தொழிலாளர் மீதான கொடூரச் சுரண்டலும் அவல நிலையும்

ஆண்டுக்கு 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறனை நோக்கிய அல்ட்ராடெக் நிறு வனத்தின் அசுர வளர்ச்சிக்கு, பெட்னி கோட்டா ஆலை பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த ஆலையின் விரிவாக்கம் மற்றும் தினசரி இய க்கங்கள் முற்றிலும் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ரத்தத்திலும் விய ர்வையிலுமே இயங்கி வருகின்றன.

இருப்பினும், இத்தொழிலாளர்கள் இடைத்தரகர்களான ஒப்பந்ததாரர் களின் வசம் ஒப்படைக்கப்பட்டு, எவ்வித வேலை பாதுகாப்போ அல்லது முறை யான ஊதியமோ இன்றி அசுரத்தன மாகச் சுரண்டப்படுகின்றனர். ஆந்திர அரசு கொண்டு வந்த புதிய வேலை நேர நெகிழ்வுத்தன்மை விதிகளைப் பயன்படுத்தி, தொழிலாளர்களைத் தின சரி 10 முதல் 12 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை வாங்குவது இந்த ஆலையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கான கூடுதல் நேர ஊதியம் (Overtime Pay) இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும், அது தொழிலா ளர்களுக்கு அப்பட்டமாக மறுக்கப் பட்டது.

உரிமைக்காக முழங்கிய ‘யெல்லோ ஹெல்மெட்’ (#YellowHelmet) இயக்கம்

கார்ப்பரேட் மேலாண்மையின் இத்தகைய தொடர் அநீதிகளால் ஒட்டு மொத்தமாகப் பொறுமையிழந்த தொழி லாளர்கள், எவ்வித பாரம்பரிய தொழிற் சங்கத் தலைமைகளுமின்றி தன்னி ச்சையாக ஒன்றிணைந்து ஆலை வாயில் களில் திரண்டனர். தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்புத் தொப்பிகளை (Yellow Helmet) அடையாளமாக முன்னிறுத்தி நடத்திய இந்தப் போராட்டத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி, நாடு முழுவதும் உள்ள அல்ட்ராடெக் ஆலைகளுக்கு இடையே ஒரு மாபெரும் வர்க்க ஒருமைப்பாட்டை (Class Solidarity) உருவாக்கியது.

தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டன:

• வேலை நேரத்தைச் சட்டப்படி 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும்; கூடுதல் நேர வேலைக்கு உரிய சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும்.

• ஒப்பந்தக்காரர்களின் கருணையில் விடாமல், மாநில அரசின் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை முறையாக அமல்படுத்தி, ஒவ்வொரு மாதமும் ஊதியத்தைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.

• தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சமூகப் பாதுகாப்பு பலன் களை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்.

• அபாயகரமான சிமெண்ட் ஆலைச் சூழலில் பணியாற்றும் தொழி லாளர்களுக்குத் தூய்மையான குடிநீர், தகுந்த ஓய்வறைகள், கழிப்பறை வசதிகள் மற்றும் தர மான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்களின் வாக்குறுதியும் - தொடரும் வர்க்கப் போராட்டமும்

போராட்டத்தின் வீரியத்தால் ஆலை யின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ மான தற்காலிக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில் தொழிலாளர்கள் தங்களின் தற்காலிக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினர்.

இருப்பினும், மத்தியப் பிரதேசத்தின் ரேவா, ஜார்க்கண்டின் பத்ராது, ஆந்திராவின் தாடி பத்ரி ஆகிய இடங்களில் உள்ள அல்ட்ரா டெக் ஆலைகளிலும் இதே காலகட்ட த்தில் அலை அலையாகப் போராட்ட ங்கள் வெடித்தது, இது ஒரு குறிப்பிட்ட ஆலையின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சிமெண்ட் துறை யின் உழைப்புச் சுரண்டல் கட்டமைப்பு க்கு எதிரானது என்பதை நிரூபித்து ள்ளது. கார்ப்பரேட் விநியோகச் சங்கிலி யில் ‘கண்ணுக்குத் தெரியாத மனிதர் களாக’ நசுக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தத் தன்னிச்சை யான டிஜிட்டல் எழுச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வேட்டை க்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் விடுத்துள்ள ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.