தீக்கதிர் உலக செய்திகள்
18 Aug 2026, 9:51 pm

தீக்கதிர் உலக செய்திகள்

மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நகரமேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவை நோக்கி 620 டிரோன்கள் உக்ரைன் ரானுவத்தால் ஏவப்பட்டுள்ளது அவற்றில் 180 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் தலை நகரில் 3 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஆக.16 அன்று 600 டிரோன்கள் ஏவி நடத்தப்பட்ட தாக்குதலே மாஸ்கோ மீதான மிகப்பெரிய தாக்குதலாகப் பதிவாகியிருந்தது.

வெனிசுலா நிலநடுக்கம் : கட்டடங்களின் உறுதித்தன்மை சோதிப்பு

ஜூன் 24 அன்று வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டைநிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்கள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள தகவல்படி 6,438 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 335 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வசிப்பதற்குப் பாதுகாப்பானவையா என்பதை உறுதி செய்ய 59,109 கட்டடங்கள் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்டதில், 34,680 கட்டடங்கள் வசிப்பதற்குப் உகந்தவை என்றும், 13,733கட்டடங்கள் மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், 10,696 கட்டிடங்கள் அதிக ஆபத்தானவை என்றும்வகைப்படுத்தப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மூலம் பொய் தகவல்கள்

இஸ்ரேல் தனது குற்றங்களை மறைக்கப் போலித் தகவல்களை உலகம் முழுவதும் பரப்பி வருகிறது. இந்நிலையில்இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தவும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவும் “ஹேனோவர்இன்ஸ்டிடியூட்” என்ற பெயரில் ஒரு போலி சிந்தனைக் குழுவை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த அமைப்பு வெளியிடும் கட்டுரைகள் மற்றும் தரவுகள், ஓபன் ஏஐ , பெர்ப்ளெக்சிட்டி, கிளாட் போன்ற ஏஐ களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, இஸ்ரேலுக்குஆதரவான தகவல்களைச் சான்றாக எடுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இம்ரான் கான் மருத்துவமனைக்கு மாற்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நலம் சரியில்லை என அவருடைய வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.இந்நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக அவரை ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாக் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக 2023 முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 2025 இறுதியில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை எப்போது?

அமெரிக்க ஈரானுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்ணயிக்கப்பட்டிருந்த 60 நாள் அவகாசம் ஆக.17 ஆன்றே முடிவடைந்து விட்டது. எனினும் ஒப்பந்த நீட்டிப்பு அல்லது அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுப்பு என எந்த ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்புகள் இல்லை.

இந்நாடுகளின் அடுத்தகட்ட நகர்வு எப்போது என்னவாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்

ளது. அமெரிக்காவும் ஈரானும் ஜூன் நடுப்பகுதியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.