தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லேபர் கட்சியின் மக்கள் விரோதப் போக்கால் பிரிட்டனில் தீவிர வலதுசாரிகள் வெற்றி

8 May 2026, 9:51 pm
லேபர் கட்சியின் மக்கள் விரோதப் போக்கால் பிரிட்டனில் தீவிர வலதுசாரிகள் வெற்றி

லேபர் கட்சியின் மக்கள் விரோதப் போக்கால் பிரிட்டனில் தீவிர வலதுசாரிகள் வெற்றி

லண்டன், மே 8- பிரிட்டனில் மே 7 அன்று நடை பெற்ற உள்ளாட்சி மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் கியர் ஸ்டார்மரின் லேபர் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

நிகேல் ஃபராஜின் வலதுசாரிக் கட்சியான ரிஃபார்ம் யுகே பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் 136 மாவட்ட சபைகளில் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கும், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் சட்டமன்றங்களுக் கம் ஒரே நாளில் வாக்கெடுப்பு நடை பெற்றது.

மே 8 காலை 7.30 மணி வரை வெளியான முடிவுகளின்படி, லேபர் கட்சி 249 இடங்களை இழந்துள் ளது. நிகேல் ஃபராஜின் தேசியவாத கட்சியான ரிஃபார்ம் யுகே 352 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியும் 137 இடங்களை இழந்துள்ளது.

கிரீன்ஸ் கட்சி 25 இடங்களும், லிபரல் டெமாக்ரட்ஸ் 35 இடங்களும் கைப் பற்றியுள்ளன.

தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்டார்மர், “முடிவுகள் மிகவும் கஷ்டமானவை” என்று தெரி வித்தார்

.அவர் பதவி விலக வேண்டும் என கட்சிக்குள் வலி யுறுத்தி வரும் நிலையில் பதவி விலக மாட்டேன் என தெரிவித்துள் ளார்.

ஆளும் கட்சியாக உள்ள லேபர் கட்சி தொழிலாளர்களையும் சாமா னிய மக்களையும் கைவிட்டதன் நேரடி விளைவாக இந்த வெற்றி நிகழ்ந்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

தொழிலாளர்களை கைவிட்ட லேபர் கட்சி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக இருந்த லேபர் கட்சி, ஸ்டார்மரின் தலைமை யில் போர் வெறி பிடித்த, மக்கள் நலனை காவு வாங்குகின்ற வலதுசா ரித்தன்மை கொண்ட கட்சியாக மாறி யது.

காசா மீதான இஸ்ரேல் போருக்கு ஆதரவு, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி வந்தது.

அதே நேரத்தில் மக்கள் நலத்திட்ட உதவிகளை குறைத்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி வெட்டப்பட்டது. வேலை யின்மைக்கால உதவித்தொகைகள் குறைக்கப்பட்டது.

குடிவரவு கொள்கையில் கடுமையான நிலைப் பாடு எடுத்தது, பணக்காரர்களுக்கு சாதகமான பொருளாதாரக் கொள் கைகளை தொடர்ந்து அமலாக்கி யது.

இதனால் ஏற்பட்ட அதிருப்தியை தீவிர வலதுசாரிகள் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லேபர் கட்சியின் வாக்குகள் யுகே ரிஃபார்ம் என்ற தீவிர வலதுசாரிகளுக்கும் அவர்க ளுக்கு எதிரணியாக இருந்த கிரீன்ஸ் மற்றும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக ளுக்கும் இரண்டாகச் சிதறியுள்ள தை வாக்குப்பதிவுகள் உணர்த்து வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின் மேரி பல்கலைக்கழக அரசி யல் ஆய்வாளர் டிம் பேல் வாக்குப் பதிவு பற்றி பேசிய போது சிதறிய லேபர் கட்சியின் வாக்குகளில் பெரும்பாலானவை இடதுசாரிக ளின் கூட்டணிக்கே சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வட இங்கிலாந்து நகரங்களான சண்டர்லேண்ட், பார்ன்ஸ்லி போன்ற தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கும் நகரங்களில் யுகே ரிஃபார்ம் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நகரங்கள் கடந்த சில பத்தாண்டுகளாக லேபர் கட்சியின் பலமான பகுதிகளாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு தேர்தலில் ரிஃபார்ம் யுகே வெறும் 2 இடங்க ளை மட்டுமே வென்றது.

இப்போது மேலும் 352 புதிய இடங்களில் வென்றுள்ளது. அதாவது பிரிட்ட னில் தீவிர வலது சாரிகளின் வளர்ச்சியானது தொடர்ந்து நேர்கோ ட்டில் மட்டுமே நிகழவில்லை. அது ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சியின் கொள்கை மாற்றங்க ளுக்கு ஏற்ப வளர்ந்துள்ளது என கூறுகின்றனர்.

2024 பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 நாடாளுமன்ற இடங்களை வென்றது.

அந்த வெற்றி கன்சர் வேட்டிவ் கட்சி மீதான வெறுப்பால் வந்தது என்பதை அப்போதே பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் ஆட்சிக்கு வந்த பின் லேபர் கட்சியும் மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளையே தொ டர்ந்ததால், அந்த வெறுப்பு இப் போது அக்கட்சியையும் தோற்கடித் துள்ளது என மக்கள் கூறியுள்ளனர்.

ஏழை மக்களின் நலனை பேசி ஆட்சிக்கு வந்து, அதே மக்களை துரோகம் செய்த லேபர் கட்சியின் செயலால் தான் வலதுசாரிக் கட்சி யான ரிஃபார்ம் யுகே வெற்றி பெற்றுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் கோபத்தை வலதுசாரிகள் தங்களு க்கு சாதகமாக திருப்பிக்கொண்ட தற்கு லேபர் கட்சியின் மக்கள் விரோ தக் கொள்கைகளே அடிப்படைக் காரணம்.

எனினும் இடதுசாரிக் கட்சிகளும் மக்களின் ஆதரவை பெற்றுள்ளன என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

முழு தேர்தல் முடிவுகளும் மே 9 க்குப் பிறகு வெளியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.