யுஜிசி-நெட் தேர்வு முடிவு, விடைக்குறிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் டாக்டர் வி.சிவதாசன்எம்.பி. கோரிக்கை
yesterday

யுஜிசி-நெட் தேர்வு முடிவு, விடைக்குறிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்

டாக்டர் வி.சிவதாசன்எம்.பி. கோரிக்கை

யுஜிசி நெட் (UGC NET) ஜூன் 2026 தேர்வு முடிவுகள் மற்றும் தற்காலிக விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை (NTA)உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவ தாசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.தேர்வு நடைபெற்று 30 நாட்களுக்கு மேலாகியும் விடைக்குறிப்புகளோ முடிவுகளோ வெளியிடப்படாததுலட்சக்கணக்கான மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உதவித்தொகை(Fellowships) பெறுவதற்கும், உதவிப் பேராசிரியர் தகுதி பெறுவதற்கும் காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம்கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

தேசிய தேர்வு முகமையின் தொடரும் முறைகேடுகள்

தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகளை சந்தித்து வரும் தேசிய தேர்வு முகமை தனது செயல்பாடுகளில்இதுவரை எந்தவிதமான திருத்தங்களையும் செய்யவில்லை என்பதை இந்தத் தாமதம் வெளிப்படுத்துகிறது.எனவே, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாகவிடைக்குறிப்புகளையும் தேர்வு முடிவுகளையும் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்வி.சிவதாசன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.