தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மோடி அரசு! புதிதாக அம்பலமானது ‘யுஜிசி-நெட்’ மற்றும் ‘மறு-நீட்’ இமாலயக் குளறுபடிகள்

2 Jul 2026, 9:20 pm
தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மோடி அரசு! புதிதாக அம்பலமானது ‘யுஜிசி-நெட்’ மற்றும் ‘மறு-நீட்’ இமாலயக் குளறுபடிகள்

தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மோடி அரசு! புதிதாக அம்பலமானது ‘யுஜிசி-நெட்’ மற்றும் ‘மறு-நீட்’ இமாலயக் குளறுபடிகள்

நாடு தழுவிய 100 கண்டனப் பேரணிகள் : மாணவர்கள் அறிவிப்பு

புதுதில்லி, ஜூலை 2 - நீட் மற்றும் சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு விவகாரங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருந்த நிலையில், தற்போது புதிதாக நடந்து முடிந்துள்ள யுஜிசி-நெட் (UGC-NET) தேர்விலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட ‘மறு-நீட்’ (Re-NEET) தேர்விலும் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள மிகப்பெரும் முறை கேடுகள் இந்தியக் கல்வித்துறையை உலுக்கியுள்ளன. இந்நிலையில், தொடர் தோல்வி களுக்கும் நிர்வாகச் சீர்குலைவுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன டியாகப் பதவி விலக வேண்டும் என்றும், முறைகேடுகளின் கூடாரமாக மாறியுள்ள தேசிய தேர்வு முகமையை (NTA) முற்றிலுமாகக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் 100 பிரம்மாண்டப் பேரணி களை நடத்த இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. “மாணவர்களின் உயிரே முதன்மை யானது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்!” என்ற முழக்கத்து டன் ஜூலை முதல் வாரத்தில் இந்தி யாவின் 22 மாநிலங்களில் இந்த 100 பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏஐ குளறுபடிகளுடன் யுஜிசி-நெட் தேர்வு!

ஜூன் 2026-இல் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட யுஜிசி-நெட் தேர்வில் வரலாறு காணாத புதிய குளறு படிகள் அரங்கேறியுள்ளன. ஜலந்தரில் உள்ள தேர்வு மையத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் நடுதெருவில் நிறுத்தப் பட்டனர். அதைவிட அதிர்ச்சியாக, வினாத்தாள்களில் இடம்பெற்ற கேள்விகள் அனைத்தும் மனிதர்களால் வடிவமைக்கப்படாமல், பொறுப்பற்ற முறையில் ‘செயற்கை நுண்ணறிவுக் கூற்றுகள்’ (AI Generated) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என மாண வர்கள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி யுள்ளனர். சமூகவியல் பாட வினாத்தாளில் ஏராளமான எழுத்துப்பிழைகளும், தவறான பெயர்களும் இடம் பெற்றுள்ளன. முக்கிய சமூகவியல் சிந்தனையாளர்களின் பெயர்களான ‘Ritzer’ என்பது ‘Putzer’ என்றும், ‘Parsons’ என்பது ‘Parsow’ என்றும், ‘A R Desai’ என்பது ‘A K Desai’ என்றும் மோசமாக மாற்றப்பட்டி ருந்தன. இதுமட்டுமன்றி, சோம்பேறித் தனமான வகையில், முந்தைய வினாத்தாள்களிலிருந்து கேள்விகள் அப்படியே அப்பட்டமாக நகலெடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் பாடத்தில் 65 கேள்விகளும், வணிக வியலில் 80-க்கும் மேற்பட்ட கேள்வி களும், புவியியலில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகளும் 2024 டிசம்பர் தேர்வி லிருந்து அப்படியே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு தேசிய அளவிலான உயர்கல்வித் தேர்வின் கல்விசார் தகுதியையும், நம்பகத்தன்மையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.

‘மறு-நீட்’ தேர்விலும் கருப்புப் பட்டியல் நிறுவனத்தின் ஊடுருவல்!

மறுபுறம், முறைகேடு புகார்களால் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட்ட ‘மறு-நீட்’ தேர்விலும் ஒன்றிய கல்வி அமைச்சகம் எவ்விதப் பாடமும் கற்காமல் அலட்சியத்தின் உச்சமாகச் செயல்பட்டுள்ளது. இத்தேர்வில் மாணவர்களின் பயோ -மெட்ரிக் சோதனைகளை நடத்தும் மிக முக்கியப் பொறுப்பு, ஏற்கெனவே உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ‘இன்னோவேட்டிவ் வியூ’ (Innovative View) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, தற்போது அம்பலமாகியுள்ளது. என்டிஏ-வின் இந்தத் தொடர் துரோகங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி இதுவரை 21 அப்பாவி மாண வர்கள் தற்கொலை செய்துகொண்டு ள்ளனர். தங்களின் இயலாமையை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, உரிமைகளுக்காகப் போராடும் மாண வர்களை ‘தேசவிரோதிகள்’ என்றும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வசைபாடுவது நாட்டு மக்களை அப்பட்டமாக அவ மதிக்கும் செயலாகும் என்று இந்திய மாணவர் சங்கம் சாடியுள்ளது.

ஒடுக்குமுறைகளைத் தகர்த்துப் பாய்ந்த தொடர் போராட்டங்கள்

தேசிய தேர்வு முகமையின் இந்த வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு எதிராக, முறைகேடுகள் வெளிவந்த முதல் நாளான 2026 மே 3 அன்றே, கல்வி அமைச்சகத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கம் தனது முதல் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கி யது. அப்போது 59 தோழர்கள் காவல்துறையினரால் கொடூரமாகக் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘Enough Is Enough’ என்ற கையெழுத்து இயக்கத்தில் லட்சக் கணக்கான மாணவர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு மாபெரும் மக்கள் இயக்கமாக இது மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 22 மாநிலங்களின் 643 மையங்களில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டங் களின் போது நாடு முழுவதும் 823 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, 16 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் 19 அன்று தில்லியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் முற்றுகைப் பேரணியின் போது, காவல்துறையின் தடியடிகளையும் மீறி இந்திரஜித் குப்தா மார்க்கை 6 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் முழுமையாக முடக்கிப் போராடினர். மேலும், தற் கொலை செய்து கொண்ட மாண வர்களின் குடும்பங்களை மாணவர் சங்க தூதுக்குழுவினர் நேரில் சந்தித்து அனைத்து சட்ட உதவிகளையும் உறுதி செய்து வருகின்றனர்.

100 பேரணிகளும் கோரிக்கைகளும்

தேசிய தேர்வு முகமையைக் கலைக்கக் கோரியும், கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் ஜூன் 26 முதல் ஜூலை 13 வரையிலான காலகட்டத்தில் 100 பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் இந்த இயக்கங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. புதுச்சேரி, தெலுங்கானா, திரிபுராவின் அகர்தலா, கோவாய், மேற்கு வங்கத்தின் 21 மாவட்ட மையங்கள், தமிழ்நாட்டின் 30 மாவட்ட மையங்கள், அசாமின் கவுகாத்தி, ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, தில்லி, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மற்றும் அலகாபாத், கேரளாவின்14 மாவட்ட மையங்கள், மத்தியப் பிரதேசத்தின் போபால், ஜம்மு காஷ்மீரின் குல்காம், கர்நாடகாவின் பெங்களூரு, ஹாவேரி, கங்காவதி, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, உத்தரகண்டின் டேராடூன், குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் ஆந்திராவின் திருப்பதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 100 முக்கிய மையங்களில் இப்பேரணிகள் திட்டமிட்டபடி எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த 100 பேரணிகளின் வாயிலாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; முறைகேடுகளின் கூடாரமான தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும்; தேர்வு நடத்தும் அதிகாரங்களை மாநிலங்களுக்கே வழங்கி தேர்வு முறையை பரவலாக்க வேண்டும்; சிபிஎஸ்இ தேர்வுகளில் கொண்டு வரப்பட்டுள்ள ‘ஓஎஸ்எம்’ (OSM) மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்; நீட், சிபிஎஸ்இ மற்றும் நெட் முறைகேடுகள் குறித்து சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; முறைகேடுகளில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; தேர்வு குளறுபடிகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது தெலுங்கானா ராஜ் பவன் முற்றுகைப் போராட்டத்தின் போது, அம்மாநில எஸ்எப்ஐ செயலாளர் டி. நாகராஜூ உள்ளிட்ட 327 தோழர்கள் லத்தி சார்ஜ் செய்யப்பட்டுச் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பீகாரில் போராடியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள மாணவர் சங்க மாநிலத் தலைவர் காந்தி குமாரி உள்ளிட்ட 40 மாணவர்களை விடுதலை செய்யக் கோரி ஜூலை 6 அன்று ‘நகர்நவ்சா சலோ’ பேரணி நடைபெறவுள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் இந்தச் சமரசமற்ற போராட்டம் ஓயாது என இந்திய மாணவர் சங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.