நெட் தேர்வு வினாத்தாளும் கசிவு? தேர்வுக்கு முன் 100 பக்கம் பிடிஎப் வெளியானது ; ரூ.2.25 லட்சத்திற்கு விற்பனை
9 Jul 2026, 8:59 pm

நெட் தேர்வு வினாத்தாளும் கசிவு? தேர்வுக்கு முன் 100 பக்கம் பிடிஎப் வெளியானது ; ரூ.2.25 லட்சத்திற்கு விற்பனை

புதுதில்லி 2026ஆம் ஆண்டுக்கான யுஜிசி- நெட் (UGC-NET) தேர்வு தேசிய தேர்வு முகமை யால் ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை, பல்வேறு தேர்வு மையங்களில் பல ஷிப்டுகளாக நடத்தப்பட்டது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிந்தது போலவே நெட் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. யுஜிசி-நெட் சமூகவியல் தேர்வு ஜூன் 30 அன்று நடைபெற்றது. இந்த வினாத்தாள் தயாரிப்போடு தொடர்புடையதாகக் கூறப் படும் ‘100 பக்க மாதிரி பிடிஎப் (PDF)’ ஒன்று தேர்வு நடப்பதற்கு முன்பே வெளியாகியுள்ளது. ஆனால் தேர்வு நடந்து முடிந்த பின்பு உண்மையான வினாத்தாளுடன் 90 கேள்விகள் மாதிரி பிடிஎப் ஒரே மாறி இருந்துள்ளன. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இந்த புகார்களின் பின்னணி யைக் கண்டறியுமாறு ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு தேசிய தேர்வு முகமை அறி வுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

ரூ.2.25 லட்சம்

நெட் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகை யில்,“யுஜிசி-நெட் தேர்வு குறித்து எழுந்துள்ள தீவிரமான புகார்கள் முற்றிலும் அதிர்ச்சிய ளிக்கின்றன. நீட் வினாத்தாள் கசிந்த சில வாரங்க ளிலேயே, யுஜிசி-நெட் தேர்வுக்கு சற்று முன்பாக 100 பக்க பிடிஎப் ஒன்று பரப்பப்பட்ட தாக தற்போது செய்திகள் வெளிவருகின்றன. தேசிய தேர்வு முகமையிடம் மட்டுமே இருக்க வேண்டிய வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பிடிஎப், தேர்வு நடப்பதற்கு முன்பே வெளி யாகிவிட்டது. பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த வினாத்தாள் 2.25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதே கும்பல் அடுத்து வரவிருக்கும் சிஎஸ்ஐஆர்-நெட் (CSIR-NET), எச்டிஇடி (HTET) மற்றும் ஏடிஏ (ADA) போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள் களையும் விற்க முன்வந்துள்ளது. நீட் மற்றும் நெட் தேர்வுகளில் தொடர்ச்சி யான முறைகேடுகள் நடந்த பிறகும், மோடி அரசு தொடர்ந்து இதைக் கண்டுகொள்ளாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், நள்ளிரவிலும் விளக்கெரித்து லட்சக்கணக்கான மாணவர்கள் பல வருடங்க ளாகப் போட்ட கடின உழைப்புக்கு இந்த அரசி டம் எந்த மதிப்பும் இல்லை. பிரதமரிடமிருந்தோ அல்லது கல்வி அமைச்சரிடமிருந்தோ எந்த வொரு பொறுப்புணர்வையோ அல்லது நடவ டிக்கையையோ எதிர்பார்ப்பது வீண் என்பதை இந்த நாடே அறியும். எந்தவொரு விசாரணை யும் நடக்காது, மாணவர்களுக்கும் நீதி கிடைக் காது. மாற்றத்திற்கான ஒரே கருவி நமது கூட்டுக்குரல் மட்டுமே. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் அந்த உரத்த எதிரொலிதான், இந்தியாவில் ஒரு கல்விப் புரட்சியைக் கொண்டு வரும்” என அவர் கூறினார்.