மும்மொழிக் கொள்கை உத்தரவிட யுஜிசிக்கு அதிகாரமில்லை பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி
7 Dec 2025, 3:52 pm
<p><strong>மும்மொழிக் கொள்கை உத்தரவிட யுஜிசிக்கு அதிகாரமில்லை பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி</strong></p>
<p>திருநெல்வேலி: தமிழக உயர்கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவுக்கு (யுஜிசி) உத்தர விட அதிகாரம் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை பேசிய அவர், உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை வழங்குவது மட்டுமே யுஜிசியின் பணி. மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்த யுஜிசிக்கு அதி காரம் கிடையாது என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவு படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும், அதனை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. ஒன்றிய அரசின் ஏவலர்களாக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை இருந்த நிலையில், இப்போது தேர்தல் ஆணையமும் யுஜிசியும் சேர்ந்துள்ளன என்று அவர் விமர்சித்தார். நீதித் துறையையும் ஒன்றிய அரசு கபளீ கரம் செய்யும் அச்சம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.</p>
