நலத்திட்ட உதவிகள் வழங்கல்
2 Sept 2026, 10:42 pm
<p><strong>நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p><p>உடுமலை, செப்.2-தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் உடுமலைப்பேட்டை வட்டக்கிளை முன்னணி தோழரும், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் வட்டக்கிளை பொருளாளரும், ஓய்வுபெற்ற துணைப்பதிவாளருமான எஸ்.கிருஷ்ணன் என்பவரின் மனைவி கே.மீனாம்பாள் அவர்களின் 12 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, 450 ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் முத்துக்குமார், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்லத்துரை, தமுஎகச நிர்வாகி சுதா சுப்பிரமணியன், சன்மார்க்க சங்க நிர்வாகி திருப்பதி, ஓய்வூதியர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
