தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர் ஆதாரத்தை சூறையாடும் குழாய் பதிக்கும் பணி

31 Oct 2026, 12:07 am
நீர் ஆதாரத்தை சூறையாடும் குழாய் பதிக்கும் பணி

நீர் ஆதாரத்தை சூறையாடும் குழாய் பதிக்கும் பணி

உடுமலை, அக்.30-உடுமலைப்பேட்டை வட்டாரத்தில், ஆறு கிராமங்களின் விவசா

பதிக்கும் பணிகளைஉடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.உடுமலைப்பேட்டை அருகே சின்னவீரம்பட்டி கிராமத்தில் ராஜவாய்க்கால் அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்துஇலுப்பநகரம் கிராமம் வரை சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்குபதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக அரசு நீர்வழிப்பாதைகள், பொதுப்பணித்துறையின் பிஏபி (PAP) வாய்க்கால்கள்மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் சின்னவீரம்பட்டி, புக்குளம், குறிஞ்சேரி, ஏரிப்பாளையம், பெரியகோட்டை, இலுப்பநகரம் ஆகிய ஆறு கிராமங்களின் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது. ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் நோக்கில் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான சி.மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகார பலத்தை பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த அக்டோபர் 17 அன்று விவசாயிகள் பணிகளை தடுத்து நிறுத்தியபோது, உடுமலைப்பேட்டை வட்டாட்சியரும் காவல் துறையினரும் தங்களுக்கு ஆதரவாக பேசாமல் விவசாயிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கியதாக கூறப்படும் அனுமதிகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், தவறான தகவல்களின் அடிப்படையில் அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து உரியவிசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு நிலங்கள், பொதுப்பணித்துறை நீர்வழிப் பாதைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை சட்டவிரோதமாக சேதப்படுத்தியதற்காக இந்திய தண்டனைச் சட்டம்மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை நகரக்குழு தலைவர் எம்.மோகன்ராஜ், செயலாளர் எம்.செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளியன்று அளித்துள்ள மனுவில்,”மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இக்குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து, ஆறு கிராம மக்களின் விவசாயத்தையும் குடிநீர்உரிமையையும் பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.