முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்!

30 Oct 2026, 12:24 am
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்!
<p><strong>குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்!</strong></p><p>உடுமலை, அக்.29-உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில்ஈடுபட்டனர்.</p><p>திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் வியாழனன்று காலிக்குடங்களுடன் உடுமலை – தாராபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் பிரச்சினைக்குவிரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram