முந்தய பக்கம்

பராமரிப்பின்றி கண்காணிப்பு கேமராக்கள்

24 Sept 2026, 1:27 am
பராமரிப்பின்றி கண்காணிப்பு கேமராக்கள்

பராமரிப்பின்றி கண்காணிப்பு கேமராக்கள்

உடுமலை, செப். 23-உடுமலைப்பேட்டை நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் குற்றங்களை தடுக்க பல லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன.

தற்போது பல இடங்களில் கேமராக்கள் பழுதடைந்தும், வயர்கள் அறுந்தும் தொங்கு

கின்றன. எலையமுத்தூர் பிரிவு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ள கருவியே சேதமடைந்து தொங்கும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழும்போது ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இக்கேமராக்களை உடனடியாக ஆய்வு செய்து, பழுதடைந்தவற்றை சீரமைக்க வேண்டும்; தொடர்ந்து பராமரிக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram