தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

45 ஆண்டுகால காத்திருப்பு - எங்க கிராமத்திற்கு வருமா அரசுப் பேருந்து?

23 Jul 2026, 11:37 pm
45 ஆண்டுகால காத்திருப்பு - எங்க கிராமத்திற்கு  வருமா அரசுப் பேருந்து?
<p><strong>45 ஆண்டுகால காத்திருப்பு - எங்க கிராமத்திற்கு வருமா அரசுப் பேருந்து?</strong></p><p>உடுமலை, ஜூலை 23- 45 ஆண்டுகால கோரிக்கையான வெங்கிட்டாரபுரம் கிராமத்திற்கு பேருந்து வசதியை செய்துதரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று போக்குவரத்து பணிமனையில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டி ஊராட்சிக்குட் பட்ட வெங்கிட்டாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுப் பேருந்து வசதி எதுவும் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல் லூரி மாணவர்கள் அன்றாடம் வேலைக்கும் கல்வி பயிலவும் 3 கிலோ மீட்டருக் கும் அதிகமான தூரம் நடந்து சென்று, ஜல்லி பட்டி அல்லது குறிச்சிக் கோட்டை பகுதியில் உள்ள பழனி சாலையை அடைய வேண்டிய சிரம மான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் சிரமத் தைக் குறைக்கவும், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண் டும், வெங்கிட்டாபுரம் கிராமத்திற்கு உட னடியாகப் பேருந்துகள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காகப் பொதுமக்களிடம் பெறற் பட்ட கையெழுத்து அடங்கிய கோரிக்கை மனு உடுமலை போக்கு வரத்துப் பணிமனை கிளை மேலாளரி டம் வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் உடுமலை ஒன்றியச் செயலாளர் மாசாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்வாகிகள் கருப்புசாமி, ஆஜித், சுந்தரம், லாவண்யா மற்றும் வெங்கிட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.