அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகம்</strong></p>
<p>உடுமலை, டிச.10- உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குப்பை மேடாக உள்ளது. இதில், காத்திருப்போர் கூடம், பயன்படுத்த முடியாத கழிப்பிடம், குடி நீர் இல்லாத தொட்டி என அடிப்படை வச தியும் இல்லாத அவல நிலை உள் ளது. உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வருவாய் பிரிவு வட்டாட்சியர் அலுவலகங்கள், குற்றவி யல் நீதிமன்றம், குடிமைப்பொருள் அலு வலகம், கிளை சிறைச்சாலை, சார்பதி வாளர் அலுவலகம், இ-சேவை மையம் என தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதி பொதுமக்கள் அரசு திட்டங்கள் பெறவும், வருவாய் துறையின் சான்றி தழ்களைப் பெறவும் உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்க ளுக்கு அலுவலக வளாகத்தில் குடிநீர் என்று பெயர் மட்டும் எழுதிய குடிநீர் தொட்டியில் தண்ணீர் வருவது இல்லை. பொதுக் கழிப்பறை கட்டிடம் புதர் மண்டி விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது. இதனால் அப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்தாமல், வளாகம் முழு வதும் ஒழுங்கின்றி நிறுத்துவதால் மக் கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அலுவலக வளாகத்திலேயே அடிப் படை வசதிகள் செய்து வைக்காத வட் டாட்சியர், எங்களுக்கு எப்படி அரசு திட் டங்களை செயல்படுத்துவார் என கேள்வி எழுப்பினர். பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகை யில் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வாளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
