உடுமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக
18 hours before
<p><strong>உடுமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக</strong></p><p>உடுமலை, நவ. 7-உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், பயணிகளின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வசதியைத் தடையின்றி வழங்க வேண்டும். சுகாதாரமான முறையில் கழிவறைகளைப் பரமரிக்கத் தனியாகப் பணியாளர்களை நியமித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பயணிகள் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாமல் அமர்ந்து செல்லும் வகையில் போதுமான பயணிகள் நிழற்குடைகள் மற்றும் கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தின் அடிப்படைத் தேவைகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ரயில்வேபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
