தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளைநிலங்களை காக்கும் குளங்கள்: கருவேல மரங்களை அகற்றி பனை மரங்கள் நட வலியுறுத்தல்!

29 Sept 2026, 11:28 pm
விளைநிலங்களை காக்கும் குளங்கள்: கருவேல  மரங்களை அகற்றி பனை மரங்கள் நட வலியுறுத்தல்!
<p><strong>விளைநிலங்களை காக்கும் குளங்கள்: கருவேல மரங்களை அகற்றி பனை மரங்கள் நட வலியுறுத்தல்!</strong></p><p>உடுமலை, செப்.29-உடுமலை தாலுகா பகுதியில் விவசாய பணிகளுக்கு பிரதான நீர் ஆதாரமாக திகழ்வது திருமூர்த்தி அணையாகும். இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரை பெற்று, அப்பகுதியின் பாசனத் தேவையைபல்வேறு நீர்நிலைகள் பூர்த்தி செய்து வருகின்றன.அந்தவகையில் உடுமலை பகுதியில் உள்ள தினைக்குளம் (51.19ஏக்கர்), கரிசல்குளம் (31.22 ஏக்கர்), வளையகுளம் (52.80 ஏக்கர்), செட்டிகுளம் (67.49ஏக்கர்), ஒட்டுகுளம் (90.00 ஏக்கர்), பெரியகுளம் (404.00 ஏக்கர்), செங்குளம் (77.84 ஏக்கர்) மற்றும் அம்மாபட்டி குளம் (31.22 ஏக்கர்) ஆகிய நீர்நிலைகள்திருமூர்த்தி அணையின் நீர் வரத்தையே முதன்மையாக நம்பியுள்ளன. இக்குளங்களின் மூலமாகசுமார் 2,643 ஏக்கர் விவசாய விளைநிலங்கள்நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியின் உணவு உற்பத்தியிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் இந்நீர்நிலைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.ஆனால், தற்போது இக்குளங்களின் கரைப்பகுதிகளில் அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் மற்றும் முள் மரங்கள், நிலத்தடி நீரை கணிசமாகஉறிஞ்சுவதோடு குளங்களின் நீர்ப்பிடிப்பு திறனையும் பெருமளவில் பாதித்து வருகின்றன. எனவே, பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களின் கரைகளில் ஆக்கிரமித்துள்ள முள் மரங்களைஉடனடியாக அகற்ற வேண்டும் என்றும். மண் அரிப்பை தடுத்து கரைகளை பலப்படுத்தும் வகையில் பனை மரங்களை பெருமளவில் நட வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.