தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப்பணியில் தனியார் மயம் - நகராட்சியே ஏற்று நடத்த உடுமலை நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

16 Jun 2026, 12:09 am
தூய்மைப்பணியில் தனியார் மயம் - நகராட்சியே ஏற்று நடத்த உடுமலை நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

தூய்மைப்பணியில் தனியார் மயம் - நகராட்சியே ஏற்று நடத்த உடுமலை நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

உடுமலை, ஜூன் 15- உடுமலை நகராட்சியில் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை ரத்து செய்து, பணியை நகராட்சி நிர்வாகமே நேரடி யாக நடத்தக் கோரி நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை நகர் மன்ற கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இதில், அதிகாரி களின் சுணக்கத்தால் நகராட்சியில் குடி நீர், மின்விளக்கு, சாலைப் பணிகள் முடங்கியுள்ளன. பராமரிப்பு இல்லாத தால் நகராட்சி கடைகள் வாடகைக்கு விடப்படாமல் பூட்டிக்கிடப்பது தனியார் கடைகளுக்கே சாதகமாக முடிகிறது என உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பருவமழை தொடங்குவதால் நீர்நிலைகளைத் தூர்வாரவும், வடி கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தினர். முன்னதாக, தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் தராமல் சுரண்டுவ தைத் தடுக்கவும், ஊழியர்களை நிரந்தர மாக்க வேண்டும் என உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானம் ஒருமன தாக ஏற்றுக் கொள் ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விவா தத்தில், இக்கூட்டத் தில் 2 சிறப்புத் தீர் மானங்கள் உட்பட மொத்தம் 76 தீர் மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

காரல் மார்க்சுக்கு சிலை

நகரிலுள்ள தேசியத் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்கவும், பரா மரிக்கவும் நகராட்சி சார்பில் பூங்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற் கனவே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகி யோரின் சிலைகளை வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் ஆகி யோரின் சிலைகளையும் அங்கு அமைக்க 33-வது வார்டு நகர்மன்ற உறுப் பினர் வேலுச்சாமி சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். நகராட்சி சர்வே வார்டு F, பிளாக் 1-ல் உள்ள 180.50 சதுர மீட்டர் பரப்பள விலான இப்பூங்காவில், இத்தலைவர்களின் வெண்கலச் சிலைகளைத் தனது சொந்தச் செலவில் நிறுவி பராமரித்துக் கொள்வதாக உறுப்பினர் வேலுச் சாமி உறுதிமொழிப் பத்திரம் அளித்துள்ளார். இத்தீர்மானம் கூட்டத்தில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.