தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உடுமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

14 Nov 2025, 1:26 pm
மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உடுமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
<p><strong>மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உடுமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை</strong></p> <p>உடுமலை,நவ.14- உடுமலை கொழுமம் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள தனியார் மது பானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் மனு அளித்தனர். &nbsp; உடுமலை &nbsp;நகர்மன்ற &nbsp;கூட்டம் வெள்ளி யன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் &nbsp;கரூர் கூட்டநெரிசல் மற்றும் டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு, ஆந் திரா பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, 78 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் நகராட்சிப் பகு தியில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் பொது &nbsp;சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள 40 &nbsp;டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்களுக்கு பணிகளை மேற்கொள்ள ரூ.53 லட்சம் பொது நிதியிலிருந்து ஒதுக்கப்படும். நகராட் சியில் 2025 - 26 ஆம் ஆண்டிற்கு நகராட்சிக்கு &nbsp;தேவையான எழுது பொருட்கள், &nbsp;காகித தாள்கள், டோனர்கள், படிவங்கள், பதிவேடு கள் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ய வருவாய் &nbsp;நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்க அனுமதி &nbsp;கோருவது தொடர்பான இரண்டு தீர்மானங்க ளுக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் &nbsp;தரவில்லை. இதனால் இந்த இரண்டு தீர்மா னங்களை &nbsp;தவிர பிற தீர்மானங்களுக்கு ஒப்பு தல் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பேசுகையில்: வேலுச்சாமி: சென்னை மாநகராட்சியில் &nbsp;தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேலை &nbsp;உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல் வர் &nbsp;துவக்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியா ளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரை வில், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக ளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற் காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வருகிறேன் என் றார். ஜெயக்குமார்: உடுமலை நகராட்சிப் பகு திகளில் பல்வேறு இடங்களில் தெரு விளக் குகள் எரிவதில்லை. புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் அலட்சியமாக செயல் படுகின்ற னர் &nbsp;என கூறினார். மேலும் கலந்து கொண்ட உறுப்பினர்கள் &nbsp;பேசும் போது: உடுமலை நகரத்தில் மழைநீர் &nbsp;வடிகால் கட்ட தோண்டப்பட்ட மண்ணை உட னடியாக அப்புறப்படுத்த வேண்டும். சீனி வாசா வீதி, சத்திரம் வீதி, சரவணா வீதி உள் ளிட்ட நகர சாலைகளை புதுப்பிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும். &nbsp;பிறப்பு &ndash; இறப்பு &nbsp;உள்ளிட்ட சான்றிதழ்களில் இருக்கும் பிழைக ளைச் சரி செய்ய வரும் மக்களுக்கு உரிய &nbsp;நேரத்தில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நகரத்தலைவர் மத்தீன்: நகர்மன்ற உறுப் பினர்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டு, சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை செய்ய வேண்டும் என்றார். துணைத்தலைவர் கலைராஜன்: கொழு மம் சாலையில் ரயில்வே கேட் அருகே தனி யார் மதுபானக் கடை உள்ளது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை வலியு றுத்தி அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கூட் டம் நடைபெறும் போதே &nbsp;நகர்மன்ற தலை வரிடம் மனுக்கள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.