முந்தய பக்கம்

உடுமலை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி

15 Mar 2026, 4:11 pm
உடுமலை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி
<p><strong>உடுமலை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி</strong></p> <p>உடுமலை, மார்ச் 15- உடுமலை இலக்கிய களத்தின், 30 ஆவது இலக்கிய சந்திப் பில் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை இலக்கிய களத்தின் 30 &nbsp;ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி, சனியன்று மீனாட்சி &nbsp;திருமண மண்டபத்தில் ராஜமாணிக்கம் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய அம்மா என்னும் சிறுகதை குறித்து &nbsp;சாகிதா பானு, எழுத்தாளர் கந்தவர்வனின் சீவன் என்ற சிறு கதையை உடுமலை அரசுக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வா ளர் செ.அனுசுயா, எழுத்தாளர் இமயத்தின் நன்மாறன் கோட்டை என்ற கதை குறித்து கோவை பாரதியார் பல் கலைக்கழக முதுகலை மாணவர் துங்கன், எழுத்தாளர் தேனி &nbsp;சீருடையானின் நிறங்களின் உலகம் என்ற புத்தகம் குறித்து &nbsp;பட்டிமன்ற பேச்சாளர் சுடர்விழி ஆகியோர் அறிமுகப்ப டுத்திப் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் முனியப்பன், கவிஞர் சோலை மாயவன், புன்னகை ஜெயக்குமார், பேராசிரியர் மோகனா, ஓய்வுபெற்ற நிலவியல் துறை இணை &nbsp;இயக்குநர் சிவக்குமார், வேளாண்மை துறை இணை இயக்கு நர் செல்வராஜ், ஆசிரியர் செல்லத்துரை உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். முடிவில், ஜெயராஜ் நன்றி கூறி னார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram