மேல் சிகிச்சைக்கு அலைக்கழிப்பு: உடுமலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை!
26 Sept 2026, 1:10 am

மேல் சிகிச்சைக்கு அலைக்கழிப்பு: உடுமலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை!

உடுமலை, செப்.25–உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மேல் சிகிச்சை என்ற பெயரில்அலைக்கழிப்பதை தவிர்க்க, காலியாக உள்ள சிறப்பு மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில், விபத்தில் தலையில் பலத்த காயமடைபவர்கள் மற்றும் நரம்பியல் பாதிப்புகொண்ட கர்ப்பிணிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கே பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமான நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் பொது அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைக்காயம்ஏற்படும்நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில்தலைக்காய அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அதேபோல், கிராமப்புறங்களில் அதிகளவில் ஏற்படும்பாம்பு மற்றும் விஷக்கடி சம்பவங்களுக்கு உடனடி சிகிச்சைகிடைக்கும் வகையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவையும் ஏற்படுத்த வேண்டும்.

அவசர சிகிச்சையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பொது அறுவைசிகிச்சை மற்றும் நரம்பியல் வல்லுநர்களை உடனே நியமிக்க வேண்டும். தலைக்காய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விஷக்கடிகளுக்கான சிறப்பு சிகிச்சைப்பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும். பொதுமக்களின் நலன்கருதி தேவையான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமித்து அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்உடுமலை ஒன்றியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.