தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயிர் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்

26 Sept 2026, 1:24 am
உயிர் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்

உயிர் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்

உடுமலை, செப்.25- தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, பிஏபி பாசனத்திற்கு உயிர் தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து, உடுமலை அருகே விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனதிட்ட கால்வாய்களை தூர்வார உடனடியாக தடையில்ல சான்றிதல் வழங்க வேண்டும், 2-ஆம்மண்டல பாசனத்திற்கு தாமதமின்றிதண்ணீர் திறக்க வேண்டும். கருகிய மற்றும் காய்ப்புத்திறனை இழந்ததென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று மறியல் நடைபெற்றது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உடுமலை, அந்தியூர் அருகே உள்ள தேசிய நெடுச்சாலையில் நடைபெற்ற மறியலுக்கு, சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், கோவை மாவட்டச்செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, பொருளாளர் திருமலைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மதுசூதணன், செயலாளர் குமார், உடுமலை ஒன்றியச் செயலாளர் அருண்பிரகாஷ், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

கடுமையான வறட்சி ஏற்பட் டுள்ளதால் பிஏபி தொகுப்பு அணைகளில் போதிய தண்ணீர் இருக்கும் நிலையில் பாசனத்திற்கு தண்ணீர்திறக்காமல் உள்ளது. பிஎபி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி, வட்டாட்சியர் அருணா ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.