விவசாயிகள் சங்க உடுமலை நகர மாநாடு
20 Jul 2026, 11:28 pm
<p><strong>விவசாயிகள் சங்க உடுமலை நகர மாநாடு</strong></p><p>உடுமலை, ஜூலை 20 – தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை நகர மாநாடு திங்களன்று ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். விவசாயிகள் சங்கதின் உடுமலை நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எம். வீரப்பன் துவக்கிவைத்தார். சிபிஎம் நகர செயலாளர் தண்டபாணி, விவசாயத்தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், ஆட்டோ சங்கத்தின் செயலா ளர் ஜஹாங்கீர் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில், வார சந்தையில் தனியார் கமிஷன் கடை உரிமையாளர்களின் ஆதிக்கத்தால் குறைவான விலைக்கு விலை பொருள் களை விற்க வேண்டிய நிலை உள்ளதால் விலை பொருட்களுக்கு அரசே விலை நிர் ணையம் செய்ய வேண்டும். விவசாய பொருள்களை பதப்படுத்தும் வகையில் நக ரில் பதப்படுத்தும் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் மற்றும் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. முன்னதாக இந்த மாநாட்டில் உடுமலை நகரக் கமிட்டியின் தலைவராக மோகன்ராஜ், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறி முகம் செய்து வைத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன் நிறைவுரையாற்றினார்.</p>
