குடிநீர் கேட்டு சாலை மறியல்
25 Jun 2026, 1:19 am
<p><strong>குடிநீர் கேட்டு சாலை மறியல்</strong></p><p>உடுமலை, ஜூன் 24- உடுமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங் களுடன் அரசுப்பேருந்துகளை சிறைபிடித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கல்லா புரம் ஊராட்சிக்குட்பட்ட வேல் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக, முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக் கள் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், புதனன்று காலிக்குடங்களுடன் கொழுமம் - அமராவதி அணை சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசுப்பேருந்தை சிறைபிடித்து முழக்கங்களை எழுப்பி யதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமராவதி நகர் காவல் துறையினர் மற்றும் ஊராட்சி செயலாளருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதன்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முறையாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அத னையேற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. </p>
