புறவழிச்சாலையில் சீரமைப்புப்பணிகள்
10 Oct 2026, 10:57 pm
<p><strong>புறவழிச்சாலையில் சீரமைப்புப்பணிகள்</strong></p><p>உடுமலை, அக்.10-தாராபுரம் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்த நிலையில், சீரமைப்புப்பணிகள் உடனடியாக தொடங்கியது.மேடு பள்ளங்களுடன் காணப்பட்ட இந்த புறவழிச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை நகரக்குழு சார்பில் வெள்ளியன்று போராட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, சாலை சீரமைப்புப் பணிகள் உடனடியாக தொடங்கியுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சீரமைப்புப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.</p>
