குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
13 Jul 2026, 10:27 pm
<p><strong>குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை</strong></p><p>உடுமலை, ஜூலை 13- அணிக்கடவு ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப் பாட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் திங்களன்று ஊராட்சி மன்ற அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட அணிக்கடவு ஊராட்சியில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடி நீர் தேவைக்காக திருமூர்த்தி அணை யில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், மிகக் குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கடந்த மூன்று மாதங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படாததால் இந்த முற்றுகைப் போராட் டம் நடத்தப்பட்டது என்றார். முன்னதாக, போராட்டம் நடை பெற்ற இடத்திற்கு வந்த குடிநீர் வடி கால் வாரிய உதவிப் பொறியாளர் சின்ன சாமி, குடிமங்கலம் காவல்துறை ஆய் வாளர் மகேஸ்வரி மற்றும் ஊராட்சி செயலாளர் சென்னியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடி நீர் குழாய் உடைப்புகளை சரிசெய்து, தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் தடை யின்றி வழங்க ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கநாதன், கிளைச் செயலாளர் ராஜேஷ்குமார், மாதர் சங்க நிர்வாகி கள் ரேணுகா, மாசிலாமணி, விவசாய சங்க நிர்வாகிகள் காளிமுத்து, ரமேஷ், விஸ்வநாதன் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
