தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றியத்தில் விண்ணப்பித்தோருக்கு பட்டா, வீடு வழங்க உடுமலை விவசாயத் தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்

23 Dec 2025, 4:05 pm
ஒன்றியத்தில் விண்ணப்பித்தோருக்கு பட்டா, வீடு வழங்க உடுமலை விவசாயத் தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்
<p><strong>ஒன்றியத்தில் விண்ணப்பித்தோருக்கு பட்டா, வீடு வழங்க உடுமலை விவசாயத் தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்</strong></p> <p>உடுமலை, டிச.23- உடுமலைபேட்டை ஒன்றியத்தில் வீடு &nbsp;கேட்டு மனு அளித்துள்ள விவசாய தொழிலா ளர்களுக்கு &nbsp;உடனடியாக பட்டா வழங்கி, தமி ழக அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் &nbsp;வழங்க வேண்டும் என அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத்தின் உடுமலை &nbsp;ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. &nbsp; அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க உடுமலை ஒன்றிய 11 ஆவது மாநாடு &nbsp;செவ்வாயன்று எரிசனம்பட்டியில் நடைபெற் றது. சங்க ஒன்றியத் தலைவர் ரங்கராஜ் தலை மையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட் டச் செயலாளர் பஞ்சலிங்கம் துவக்கி வைத்து &nbsp;பேசினார். நீண்ட நெடுங்காலமாய் நிலம் (விடு தலைக்கு முன்னும் பின்னும்) என்னும் தலைப் பில் சங்க மாநில பொருளாளர் பழனிச்சாமி &nbsp;கருத்துரை வழங்கினார். விவசாயிகள்சங்க உடுமலை ஒன்றியத் தலைவர் பாலதண்ட பாணி வாழ்த்திப் பேசினார். ஊரக வேலை உறுதிச் சட்டத்தை விக்சித் &nbsp;பாரத் ஜி ராம்ஜி என மாற்றி, இந்த திட்டதை &nbsp;செயல் இழக்க செய்யும் புதிய &nbsp;சட்ட திருத் தத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, தமிழக அரசின் வீடு வழங்கும் திட் டத்தில் வீடுகள் வழங்க வேண்டும், ஒன்றி யம் முழுவதும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க &nbsp;கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் &nbsp;நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு: உடுமலை ஒன்றியத் தலைவராக ரங்க ராஜ், &nbsp;செயலாளராக கனகராஜ், பொருளாள ராக வஞ்சிமுத்து, துணைத்தலைவராக சுப்பு லட்சுமி, துணைச் செயலாளராக துரையர சன் &nbsp;ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறை வாக &nbsp;ஒன்றிய துணைத் தலைவர் சுப்புலட் சுமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.