தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

5 Apr 2026, 5:18 pm
திருச்சி விரைவு செய்திகள்

இன்று கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின்  திமுக வேட்பாளர்களுக்கு  வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம், ஏப். 5-  தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கும்பகோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து, கும்பகோணத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு காந்தி பூங்கா அருகில் சாக்கோட்டை அன்பழகனை ஆதரித்தும், பகல் 12 மணிக்கு பந்தநல்லூர் கடை வீதியில் கோவி. செழியனை ஆதரித்தும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  8 தொகுதிகளிலும் 42 பேர் வேட்பு மனுத் தாக்கல்

தஞ்சாவூர், ஏப். 5-  தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும், சனிக்கிழமை ஒரே நாளில் 42 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி மற்றும் ஏப். 2 ஆம் தேதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து சனிக்கிழமை 3 ஆவது நாளாக வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் பிற தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தஞ்சாவூரில் சனிக்கிழமை மொத்தம் 9 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதேபோல் கும்பகோணத்தில் 9 பேரும், திருவிடைமருதூரில் 7 பேரும், திருவையாறில் 5 பேரும், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணியில் தலா 3 பேர் என மொத்தம் 42 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள 8 பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 89 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூரில் 2 ஆவது முறையாக  அமைச்சர் கார் சோதனை

அரியலூர், ஏப். 5-  அரியலூரில், அமைச்சர் சா.சி. சிவசங்கர் கார், ஞாயிற்றுக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம், குன்னத்திலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற அமைச்சர் சா.சி. சிவசங்கர் காரை, செந்துறை ரவுண்டனா பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை செய்தனர்.  அப்போது, பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் சிவசங்கர் முழு ஒத்துழைப்பு வழங்கினார். சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காரை பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வாரணவாசி அருகே சென்ற போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அமைச்சர் சிவசங்கர் காரை மறித்து சோதனையிட்டனர். இதேபோல், ஏப்.1 ஆம் தேதி கீழப்பழுவூரிலும் அவரது கார் சோதனை செய்யப்பட்டது.

எரிவாயு சிலிண்டர்களை  பதுக்கினால் நடவடிக்கை

அரியலூர், ஏப். 4-  அரியலூர் மாவட்ட த்தில், சட்ட விரோதமாக எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற வீட்டு உபயோக மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்களுக்கு சீராக விநியோகம் செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தற்கு அவர் தலைமை வகித்தார்.  அப்போது அவர், “வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் முழுமையாக வழங்குவதையும், வணிக  எரிவாயு சிலிண்டர்களை சீராக கிடைக்கப் பெறு வதையும் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், சட்ட விரோதமாக எரிவாயு உருளைகளை பதுக்கினால் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் பிரிவு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  உணவகங்களுக்கு சீராக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும், எரிவாயு உருளை தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.  வீடுகளுக்கான எல்.பி.ஜி சிலிண்டர்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. தேவையின்றி அதிகமாக முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். வணிகம் சார்ந்த எரிவாயு சிலிண்டர்கள் அவ்வப்போது வரத்து பெற்று சீராக விநியோகம் செய்யப்படுகிறது. எனவே எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக சமூக வலை தளங்களில் வெளிவரும் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தக வல்களை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.