பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!
8 Apr 2026, 5:30 am

பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!

அரியலூர் / பெரம்பலூர், ஏப். 7- "பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஓடி ஓடிப் போய் யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது; சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் முரட்டு அடிமையாகச் செயல்படுகிறார்" எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்துச் செவ்வாய்க்கிழமை அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.

"தில்லி அணிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இப்போது தில்லியில் மோடியின் காலைப் பிடித்துக் கொண்டு தமிழகத்திற்குப் பாதகமான நுழைய வைக்கப் பார்க்கிறார். தமிழகத்தின் கல்வி நிதியான ரூ. 3,500 கோடியை முடக்கி, இந்தியைத் திணிக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.