சென்னையில் ரூ.16.83 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 Mar 2026, 5:56 pm
<p><strong>சென்னையில் ரூ.16.83 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்</strong></p>
<p>சென்னை,மார்ச்.1- சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிகளில் முடிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (பிப்.28) திறந்து வைத்தார். ஆயிரம் விளக்கு தொகுதி அண்ணா சாலையில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு சமூக நீதி பூங்கா’ பொதுமக்களின் பயன் பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. திய பள்ளிக் கட்டட ங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தொடுதிரை வசதிகள் மற்றும் மாண வர்களுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர், அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
