எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு
10 May 2026, 8:39 pm
<p><strong>எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு</strong> </p><p>சென்னை, மே 10 - 17 ஆவது சட்டப்பேரவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராகவும், கே.என்.நேரு துணைத் தலைவராகவும், எ.வ.வேலு கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முதன்முறையாக தேர்வு செய்யப்படுகிறார்.</p>
