‘40 நாளில் ஏமாற்றமே மிஞ்சியது’ உதயநிதி விமர்சனம்
yesterday

‘40 நாளில் ஏமாற்றமே மிஞ்சியது’ உதயநிதி விமர்சனம்

சென்னை, ஜூன் 22 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் திங்களன்று ஜூன் 22 அன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

‘வெறும் ரீல்ஸ் கன்டென்ட்’

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து களைக் கூறி உரையைத் துவங்கிய உதய நிதி, “தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்கள் முடிந்த நிலையில் ஆளுநர் உரையில் திட்டங் கள் ஏதாவது இருக்குமா என்று காத்திருந்த தமக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது” என்றார். ‘தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங் கள்’ என்று தாம் சொன்னதற்கு இணங்கி பாடப் பட்டதை பாராட்டினாலும், மரபை மீறி தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை சுட்டிக் காட்டினார். “ஆளுநர் உரை ரீல்ஸ் கன்டென்டுக்கு உதவுமே தவிர ரியல் பிரச்சனைகளுக்கு உதவு வதாக தெரியவில்லை” என்று கூறினார்.

‘எங்கள் ஓட்டும் இருக்கிறது’

ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல் பட விரும்புவதாக தெரிவித்த உதயநிதி, தங்களின் கூட்டணி கட்சியாக இருந்தவர்களின் வாக்குகளால் அரசு நடைபெற்று வருவதால் விமர்சிக்க தனக்கு அதிக உரிமை இருப்ப தாக கூறினார். மகளிர் உரிமைத் தொகை வழங்கியதற்கும், காலை உணவு திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை நீட்டித்ததற்கும் நன்றி தெரிவித்தார்.

‘ஏன் முடக்குகிறீர்கள்?’

நான்கு ஆண்டுகளில் 41 லட்சம் பேர் பயனடைந்த நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சி நடப்பதாக கேள்விப்பட்ட தாக தெரிவித்த உதயநிதி, கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 56 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்று சுட்டிக்காட்டி, இத்திட் டத்தை முடக்குவதற்கு காரணம் என்ன? என்று கேட்டார். எந்த ஆட்சியில் சாதனைகள் நடந்தது என்று மக்களுக்கும் முதலமைச்சருக்கும் தெரியும் என்று கூறிய உதயநிதி, தங்களது ஆட்சியில் நடந்த நல்லவற்றில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக குற்றஞ்சாட்டினார். திரைப்படத்தில் மட்டுமே ஒரு மாத ஆட்சி யில் பெரும் மாற்றம் சாத்தியம் என்றும் கிண்டல் செய்தார்.

‘பாஜக குரலாக இருக்கிறீர்களா?’

அறநிலையத்துறையின் வருவாய் புனித மான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் படும் என்ற ஆளுநர் உரை குறிப்பு, அறநிலை யத்துறையே இருக்கக் கூடாது என்று சொல்லும் பாஜகவின் குரலாகவே தவெக அரசும் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவ தாக கூறினார். அறநிலையத்துறை கல்லூரி களை நடத்தக் கூடாது என்ற பாஜக நிலைப் பாட்டுக்கு முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்று கோரினார்.

‘இருட்டில் மூழ்கும் தமிழ்நாடு’

முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே பெரம்பூர் தொகுதியை மின் வெட்டில் நம்பர் ஒன் ஆக்கியிருப்பதாக கடு மையாக விமர்சித்த உதயநிதி, ஆளுங்கட்சி யின் அலுவலகத்திலேயே மின்சாரம் போன தால், வந்தவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் பவர் இல்லையே என்று புலம்பிய நிகழ்வை எடுத்துக் கூறி தமிழ்நாடு இருட்டில் மூழ்கி இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

‘உ.பி. மாதிரி ஆகிவிட்டோமா?’

முதலமைச்சர் ஆட்சியில் குழந்தைகளுக் கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்று கூறிய உதயநிதி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை பார்க்கும்போது தமிழ கத்தில் இருக்கிறோமா அல்லது உ.பி. போன்ற வட மாநிலத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார். பெரும்பாலான குற்றவாளிகள் ஆளுங் கட்சியினராகவே இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய அவர், சட்டம் ஒழுங்கை பாது காப்பதே அரசின் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.