ஆளுங்கட்சியின் போலி பிம்பம் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
28 Jun 2026, 9:31 pm

ஆளுங்கட்சியின் போலி பிம்பம் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தஞ்சாவூர்/புதுக்கோட்டை, ஜூன் 28- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு படுகுழியில் தள்ளப் ப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி யுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போ தைய அரசின் போலி பிம்பம் ஒரே மாதத்தில் நொறுங்கி யுள்ளதாகச் சாடியுள்ளார். தஞ்சாவூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற திருமண விழாக் களில் பங்கேற்று அவர் பேசு கையில், “இந்த அரசின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் திமுகவினர் கைது செய்யப் படுகின்றனர்.

தூய சக்தி எனக் கூறி ஆட்சிக்கு வந்த வர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது; போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு விவ சாயிகள் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். ஆனால், இதற்கு திமுகதான் காரணம் என ஆட்சியாளர்கள் நாடக மாடுகின்றனர். சட்டப்பேர வையின் மாண்பைக் குலைத்து விட்டு, சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்வி களுக்கு முதலமைச்சர் பதிலளிப்பதில்லை.

முதலமைச்சர் சட்ட மன்றத்தில் எதையோ தேடு கிறார்; மக்களோ மின்சாரத் தையும் தண்ணீரையும் தேடு கின்றனர். ஊழல் வழக்கு களில் சிக்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆளுங்கட்சியான தவெக வில் சேர்ந்தவுடன் தூய சக்தி யாக மாறிவிடுவாரா? இது தான் இவர்களின் ஊழல் லட் சணம். இந்த அவல நிலையி லிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும்” என்றார்.