தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆளுநர் உரை வெறும் ‘ரீல்ஸ் கன்டென்ட்’ எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

18 Jun 2026, 10:30 pm
ஆளுநர் உரை வெறும் ‘ரீல்ஸ் கன்டென்ட்’ எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

ஆளுநர் உரை வெறும் ‘ரீல்ஸ் கன்டென்ட்’ எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, ஜூன் 18- தமிழகச் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் உரை யுடன் தொடங்கிய நிலையில், கூட்டம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலக் கொள்கை விளக்க வரைபடமாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய உரை, ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடு வதற்கான கன்டென்ட் மட்டுமே” என்று கடுமையாக விமர்சித்தார். கடந்த திமுக ஆட்சியில் ஆளுநர் எழுதிக் கொடுத்த உரை யை முழுவதும் வாசிக்கவில்லை என்றும், ஆனால் இன்று ஒரு வரிகூட விடா மல் படித்திருப் பது தவெகவுக் கும் பாஜகவுக்கும் இடையே மறை முக இணக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த திமுக அரசின் திட்டங்களான ஒலிம்பிக் மையங்கள், இருமொழிக் கொள்கை, கீழடி அகழாய்வு போன்றவற்றை மீண்டும் தங்களது திட்டங்களாக தவெக அரசு அறிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடு மைகளும், 65 கொலைகளும் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்று சாடினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.