பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விடும் முதலமைச்சர்
15 Jun 2026, 10:30 pm

பெண் குழந்தைகள் பாதுகாப்பில்  கோட்டை விடும் முதலமைச்சர்

சென்னை, ஜூன் 15 - குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடுவோம் என எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு புதரில் வீசப் பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரி வித்த உதயநிதி ஸ்டாலின், உண்மையான குற்றவாளி களை கண்டுபிடித்து கடுமை யான தண்டனை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார்.

சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு தவெக கட்சி யினர் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் கட்சி பிரமுகர் ஒருவர் கண வனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது, சிங்கப்பெண் படை அமைத்த சில நாட்களிலேயே சிவகங்கை யில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை நேர்ந் தது என பல்வேறு சம்ப வங்களை அடுக்கடுக்காக குறிப்பிட்டு கண்டித்திருக் கும் அவர், ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு மேலாகி யும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முத லமைச்சர் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டி னார்.

உடனடியாக காவல் துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடத்தி மண்டல மற்றும் மாவட்ட அள விலான காவல்துறை அதி காரிகளுக்கு குற்றங்களை தடுப்பதற்கான கடுமை யான உத்தரவுகளை முத லமைச்சர் பிறப்பிக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.