உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம்! பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு
3 Apr 2026, 5:05 pm
<p><strong>உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம்! பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு</strong></p>
<p>சென்னை, ஏப். 3 - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறார். ஏப்ரல் 2, 3 தேதிகளில், தனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி களில், வீடு, வீடாகவும், வீதி, வீதியாகயும் சென்று திறந்த வெளி வாகனத்தில் பிரச்சா ரம் மேற்கொண்டார். மத்திய சென்னை நாடா ளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனுடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்குகேட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்க ளும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திரு வல்லிக்கேணியில் அயோத்தி நகரில் வாக்குச் சேகரிப்பைத் துவங்கிய உதயநிதி ஸ்டாலின், ஐஸ் அவுஸ் காவல்நிலையம் அருகே நிறைவு செய்தார். பிரச்சாரத்தின் போது, “தமிழ்நாடு எப்போ தும் பாசிச சக்திகளுக்கு அடிபணியாது. மகளிருக் கான உரிமைத் தொகை, இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய திமுக அரசையே மக்கள் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவர்” என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை தில்லிக்குக் கீழ்படிந்த அடிமை என்று கடுமையாக விமர்சித்ததோடு, திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக் கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி னார். தனது தொகுதியைப் பொறுத்தவரை, “கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றும் உதயநிதி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர். கபாலி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்குச் சேக ரிப்பில் கலந்து கொண்டனர்.</p>
