சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி வேட்புமனு தாக்கல்!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி வேட்புமனு தாக்கல்!</strong></p>
<p>சென்னை, ஏப். 2 - மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில், துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் போட்டி யிடுகிறார். இந்நிலையில், அவர், வியாழக்கிழமை (ஏப். 2) சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர். சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்ற ரசு, திமுக மாநில ஊடகப் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள் ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், “இது ஒரு வரலாற்று வெற்றியாக இருக்கும். கண்டிப்பாக இந்த முறையும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரச்சாரம் 2021 தேர்தலில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின், இப்போது இரண்டாவது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகு தியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, திறந்த வெளி வாகனத்தில் ரோட் ஷோ மூலம் தனது பிரச்சா ரத்தை தொடங்கினார். அப்போது தொகுதி மக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
<p> </p>
