தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்தனாபுரத்திலும் யுடிஎப் - பாஜக ஒப்பந்தம் அம்பலமானது

10 May 2026, 8:52 pm
பத்தனாபுரத்திலும் யுடிஎப் - பாஜக ஒப்பந்தம் அம்பலமானது

பத்தனாபுரத்திலும் யுடிஎப் - பாஜக ஒப்பந்தம் அம்பலமானது

கேரள சட்டமன்றத் தேர்தலில் பத்தனாபுரம் தொகுதியில் நடந்த காங்கிரஸ் தலைமயி லான ஐக்கிய ஜனநாயக முன் னணி- பாஜக இடையேயான ஒப்பந்தம் குறித்த விவரங்களை இடது ஜனநாயக முன்னணி கூட் டணியில் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.பி. கணேஷ் குமார் (கேரள காங்கிரஸ் - பி (பத்தனாபுரம் தொகுதி)) தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் மேலும் கூறுங்கயில், ”பாஜகவின் வாக்குகள் கடுமையாகக் குறைந்து ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்குச் சென்றது. மாநிலத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடந்தன. 2016-இல், பாஜக வேட்பாளர் பீமன் ரகு பெற்ற வாக்குகள் 11,700. 2021-இல், பாஜக வேட்பாளர் 12,398 வாக்கு களைப் பெற்றார். 2025 உள்ளாட்சித் தேர்த லில், பாஜக மட்டும் தொகுதியில் இருந்து சுமார் 23,000 வாக்குகளைப் பெற்றது. அந்த நிலையில், இந்த முறை மாநிலத்தில் 3 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, பத்தனாபுரத்தில் வெறும் 7,031 வாக்கு களை மட்டுமே பெற்றது..பத்தனாபுரத் தில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லாத ட்வென்டி ட்வென்டி கட்சி, பாஜக சார்பில் போட்டியிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பல பஞ்சாயத்து வார்டுகளில் கூட, பாஜகவால் இரட்டை இலக்க வாக்குகளைக் கூட தாண்ட முடி யவில்லை. இதிலிருந்து டீல் (ஒப்பந்தம்) தெளிவாகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிரச்சாரத்தில்கூட தீவிரமாகச் செயல்படவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி-பாஜக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பத்தனாபுரம் தொகுதியில் இரு கட்சிகளும் இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராகச் செயல்பட்டன. இங்கு, பலாப்பழச் சின்னத்தின் கீழ் ட்வென்டி ட்வென்டி கட்சிக்கு ஓர் இடத்தைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் டீல் தொடங்கியது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இது போன்ற பேரங்கள் நடந்தன. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் இதை புரிந்துகொள்ளலாம். மாநிலத்தி லேயே, பாஜக வெற்றி பெற்ற மூன்று தொகுதிகளிலும் எல்டிஎப் இரண்டாம் இடத்தைப் பிடித்தது; மேலும், அந்த மூன்று இடங்களிலும் பாஜக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த மூன்று இடங்களிலும் காங்கிரஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அந்த இடங்களில் காங்கி ரஸுக்கு வாக்குகள் கூட கிடைக்க வில்லை” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.