தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உத்தவ் கட்சியின் 6 எம்.பி.,க்களை விலைக்கு வாங்கிய பாஜக ஷிண்டே அணியுடனான இணைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

21 Jul 2026, 8:53 pm
உத்தவ் கட்சியின் 6 எம்.பி.,க்களை விலைக்கு வாங்கிய பாஜக ஷிண்டே அணியுடனான இணைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உத்தவ் கட்சியின் 6 எம்.பி.,க்களை விலைக்கு வாங்கிய பாஜக ஷிண்டே அணியுடனான இணைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுதில்லி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.,க்களை, பாஜகவின் குதிரை பேர உதவியால் தங் கள் பக்கம் இழுத்தார் ஏக்நாத் ஷிண்டே (சிவ சேனா - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த 6 எம்.பி.,க்களின் இணைப்பை கடந்த ஜூலை 18 அன்று அங்கீகரித்தார். இதன் மூலம் ஷிண்டே அணி யின் பலம் மக்களவையில் 7இல் இருந்து 13 ஆக உயர்ந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொட ரில் மோடி அரசு சர்ச்சைக்கு ரிய மசோதாக்களை நிறை வேற்றுவதற்காகவே சிவ சேனா (உத்தவ்) கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.,க்களை பாஜக விலைக்கு வாங்கி யது நிரூபணமானது.

இந்நிலையில், சபாநாய கரின் இந்த முடிவை எதிர்த்து சிவசேனா (உத்தவ்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் சிவசேனா (உத்தவ்) தரப்பு வழக்கறிஞர் தேவதத் காமத் செவ்வாயன்று அவசர வழக்காக இதைப் பட்டிய லிடக் கோரி வாதிட்டார். அதில்,”எங்கள் கட்சியின் எம்.பி.,க்கள் தன்னிச்சை யாக எதிரணியுடன் இணைந்து விட்டதாக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். நாடா ளுமன்றத்தில் எங்களது அர சியல் கட்சியின் செயல்பாடு கள் முற்றிலும் முடங்கியுள் ளன” என்று மனுதாரர் தரப் பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை மையிலான அமர்வு (நீதிபதி கள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா) இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப் புக்கொண்டது. எனினும், உடனடியாக எப்போது விசா ரணைக்கு பட்டியலிடப்படும் என்பது குறித்து பின்னர் பார்க்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.