முந்தய பக்கம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு

5 Jun 2026, 10:37 pm
அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு
<p><strong>அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு</strong></p><p>அரியலூர், ஜுன் 5- உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளில் மாணவிகளுக்கு உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமையிலும் உதவித் தலைமையாசிரியர் இங்கர்சால் முன்னி லையிலும் சந்தனம், பன்னீர், பூ கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் கவிதா, மாணவிகளுக்கு நல்லொழுக்க கருத்துகளை கூறி, அவர்களுக்கு பள்ளிக்கு வரும்வழியில் யாருடைய தொந்தரவும் இருந்தால், எனது கைபேசியில் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா செய்திருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram