தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மைக்கேல்பட்டி விவகாரத்தில் பொய்ப் பிரச்சாரம் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க உ. வாசுகி வலியுறுத்தல்!

19 Feb 2026, 3:09 pm
மைக்கேல்பட்டி விவகாரத்தில் பொய்ப் பிரச்சாரம் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை  எடுக்க உ. வாசுகி வலியுறுத்தல்!

மைக்கேல்பட்டி விவகாரத்தில் பொய்ப் பிரச்சாரம் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை  எடுக்க உ. வாசுகி வலியுறுத்தல்!

தஞ்சாவூர், பிப். 19-  தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி வலியுறுத்தினார்.  தஞ்சாவூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.  தகர்ந்து போன பாஜகவின் பொய்ப்பிரச்சாரம்  மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்துப் பேசிய உ. வாசுகி, “இந்தக் குற்றப்பத்திரிகை மூலம் பாஜகவும் அதன் பரிவாரங் களும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்ட பொய்ப் பிரச்சாரம் தவிடு பொடியாகியுள்ளது.

அந்த மாணவி தற்கொலை விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பமாகும்” என்றார். “அன்றைய காலக்கட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உள்ளிட் டோர், ஒரு பொய்யையே மூலதன மாக வைத்துத் தீவிரமாகப் பரப்பி னார்கள். தற்போது சிபிஐ குற்றப்பத்தி ரிகை மூலம் உண்மை வெளி வந்துள்ள நிலையில், மத ரீதியான பிளவை ஏற்படுத்த முயன்றதற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.  வெறுப்பு அரசியலைப் பரப்பி, மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயன்ற அவர் மீது தமிழக அரசு  உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி னார்.  விவசாயிகளின் துயர் துடைக்கக் கோரிக்கை  டெல்டா மாவட்டங்களில் நடை பெற்று வரும் நெல் கொள்முதல் குறித்துப் பேசிய அவர், “பல கொள் முதல் நிலையங்களில் எடை இயந்தி ரங்களும், தூற்றும் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளன. இவற்றை உட னடியாகச் சீரமைக்க வேண்டும்.

மேலும், லாரிகள் வேலை நிறுத்தத்தால் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும். லாரி உரி மையாளர்களின் சுமையைக் குறைக்க, மத்திய அரசு வாகனப் பதிவு  புதுப்பித்தல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பதிலளிக்கும்போது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டுறவுப் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த அறி விப்பையும், தேர்தல் வாக்குறுதிப்படி கரும்புக்கான கூடுதல் விலையையும் அறிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.  மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல்: கண்டனம்  மாற்றுத்திறனாளிகளின் நிதி உதவியை உயர்த்தி வழங்கக் கோரிப் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு உ. வாசுகி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து நிதி உதவியை உயர்த்து வதோடு, தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டணி வலிமை அதிகரிப்பு  வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வது என்றும், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இம்முறை திமுக கூட்டணியில் சிபிஐ(எம்) இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சிப்போம். தேமுதிக வின் வருகை இந்தக் கூட்டணி யின் வலிமையை மேலும் அதி கரித்துள்ளது” என்றார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழகத்தைப் பாதுகாப்பேன் என்று கூறும் விஜய், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் மோசமான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து ஏன் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார்? மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே தற்போதைய பிரதானத் தேவை. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்காத விஜய்யின் பேச்சை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதை அவரது தொண்டர்களே யோசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.  இந்தப் பேட்டியின் போது சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். தமிழ்ச்  செல்வி, எஸ். செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.