முந்தய பக்கம்

உ. நிர்மலா ராணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

19 Mar 2026, 3:18 pm
உ. நிர்மலா ராணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
<p><strong>உ. நிர்மலா ராணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!</strong></p> <p>சென்னை, மார்ச் 19 - வழக்கறிஞர் - முனைவர் உ. நிர்மலா ராணியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தோழர் உ. நிர்மலா ராணியின் சகோதரியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகிக்கு முதலமைச்சர் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தங்களின் அன்புத் தங்கையுமான வழக்கறிஞர் - முனைவர் உ. நிர்மலா ராணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன். பெண்களின் உரிமைகளுக்காக வும், அவர்களுக்கு எதிரான வன் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிய தோழர் நிர்மலா ராணி அவர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முக்கிய நிர்வாகி யாக இருந்து சமூகத்தில் ஒடுக்கப் பட்டோரின் உரிமைகளுக்காகவும் களம்கண்ட போராளி! அவரது மறைவு என்பது, தங்களுக்கும், தங்களது குடும்பத்து க்கும் மட்டுமல்ல, பொதுவுடைமைப் பேரியக்கத்துக்கும் ஈடு செய்யவிய லாத பேரிழப்பு! சமத்துவச் சமுதாயத்துக்காகத் தமது இறுதிமூச்சு வரையிலும் உழைத்த தோழர் நிர்மலா ராணி அவர்களை இழந்து வாடும் &nbsp;தங்களுக்கும், அவரது வாழ்விணை யர் வழக்கறிஞர் சி.கே. ராஜ்குமார் அவர்களுக்கும், பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தமது &nbsp;இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram