பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க தவெக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் சென்னை பேரணியில் உ.வாசுகி வலியுறுத்தல்!
23 Jun 2026, 9:17 pm

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க தவெக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் சென்னை பேரணியில் உ.வாசுகி வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 23- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறை களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 23) சென்னை சைதாப்பேட்டையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளி ட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தவெக அரசு செய்ய வேண்டிய கருத்தியல் விழிப்புணர்வு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உ.வாசுகி, “பெண்கள், குழந் தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க முந்தைய திமுக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. தற்போ தைய தவெக அரசு அதிலிருந்த பல வீனங்களைக் களைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இத னை வெறும் சட்டம்-ஒழுங்கு அல்லது குற்றத் தடுப்புப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கக் கூடாது. பெண்கள் பற்றிய கருத்தியல் ரீதியான விழிப்பு ணர்வுப் பிரச்சாரத்தைத் தவெக அரசு முன்னெடுக்க வேண்டும். பாலியல் குற்ற வழக்குகளில் புகார்கள் மீது முறையான வழிகாட்டு நெறிமுறைகளைக் காவல்துறை கடைபிடிக்க வேண்டும். இத்தகைய வழக்குகளை விசாரிக்கப் போது மான அலுவலர்கள் இல்லை. காவ லர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதி கள் உள்ளிட்ட ஊழியர்கள் பற்றாக் குறையை நிரப்பினால் மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைக்கும். பாடத்திட்டத்தின் வாயி லாகக் குழந்தைகளுக்கு விழிப்பு ணர்வு ஊட்ட வேண்டும். பள்ளி களில் சில ஆசிரியர்களே குற்றச்சம்ப வங்களில் ஈடுபடுவதால் அங்கேயும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மேலும் பேசிய அவர், “பாலின சமத்துவத்தோடு சினிமாக்களும், சீரியல்களும் உருவாக வேண்டும். அரசியல் கட்சிகளைச் சார்ந்த வர்கள் குடும்ப வன்முறை அல்லது போதைப்பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையை உரு வாக்க வேண்டும். ஆளும் கட்சி என்ற முறையில் தவெக இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பல வழக்குகளில் தவெக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். காவல்துறை நடவடிக்கையைத் தாண்டி கட்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர் தவெக நிர்வாகி ஆவார். அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் தவெக சட்டமன்ற உறுப்பினர் சர வணன். இவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கக் கோரி முத லமைச்சர் ஜோசப் விஜய் அவர் களுக்கு மாதர் சங்கம் சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். இத்தகைய பல ஆலோசனைகளை அரசின் ‘சிங்கப் பெண் படை’ தலைவரிடமும் வலி யுறுத்தியுள்ளோம்” என்று குறிப் பிட்டார்.

மநுவாத சித்தாந்தமும் உடை குறித்த விமர்சனமும்

பாஜக மற்றும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்த உ.வாசுகி, “பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் பலர் பாலியல் குற்றங்களில் தொடர்புடை யவர்களாக உள்ளனர். மநுவாத சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, பெண்களைச் சகோதரிகளாகப் பாவிக்கிறோம் என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கங்களாகவே உள்ளன. பாலியல் வன்முறை வழக்குகளை முறையாகக் கையா ளாத காவலர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாலியல் வன்கொடு மைகளுக்குப் பெண்களின் உடை யைக் காரணமாகக் கூறுவதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக் கிறோம். தவறு செய்தவர்களைத் தப்பிக்க விட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணையே பலிகடாவாக்கு வதற்காகத்தான் உடை குறித்த விவா தங்களை எழுப்புகிறார்கள்” என்று சாடினார்.