தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து போராட வியாபாரிகள் முன்வர வேண்டும் ராயபுரம் பிரச்சார இயக்கத்தில் உ.வாசுகி அறைகூவல்

yesterday
ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை  எதிர்த்து போராட வியாபாரிகள் முன்வர வேண்டும் ராயபுரம் பிரச்சார இயக்கத்தில் உ.வாசுகி அறைகூவல்

ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து போராட வியாபாரிகள் முன்வர வேண்டும் ராயபுரம் பிரச்சார இயக்கத்தில் உ.வாசுகி அறைகூவல்

சென்னை, ஆக. 29-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராயபுரத்தில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தலைமையில் மக்கள் சந்திப்புப் பிரச்சார இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த இயக்கத்தை மாநில அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துகொண்டு தொடங்கி வைத்துச் சிறப்புரை யாற்றினார்.

அப்போது அவர் விரிவாகப் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருவதுடன் அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களையும் நடத்திவருவதாக அவர் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். குறிப்பாக, இப்பகுதியில் உள்ள வியாபார நண்பர் களைச்சந்தித்துப் பேசியபோது, இதற்கு முன்பும் கூட பல்வேறு தொழில் மற்றும் வர்த்தகப் பிரச்ச னைகளின் போது சிஐ டியுதொழிற்சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் மட்டுமே தங்களோடு தோளோடு தோள் நின்று போராடி பலசிக்கல்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வு பெற்றுத் தந்துள்ளதை அவர்கள் நினைவுகூர்ந்தனர் என்றார்.

தொடர்ந்து நாட்டின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும்,குறிப்பாகப் பெண்கள் மற்றும் பெண் குழந்தை களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது குறித்தும் அவர்கடுமையாகக் கவலை தெரி வித்தார். நாடு முழுவதும் எங்காவது ஒரு மூலையில் பிஞ்சு குழந்தைகள் கூடப் பாலியல்வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும், பெண்கள் கும்பலாகத் தாக்கப்படுவதும் தினசரி வாடிக்கையாக நடந்து வருவதாக அவர் சாடினார். இந்த நாட்டில் ஒரு பெண்ணாகப் பிறந்தால் பாதுகாப்பே கிடையாதா? இத்தகைய கொடூரத்தொந்தரவுகளையும் வன்கொடுமைகளையும் தான் எப்போதுமே பெண்கள்அனுபவித்துக் கொண்டு சகித்து வாழ வேண்டுமா? என்ற நியாயமான ஆவேசக் குரல் இன்று ஒட்டுமொத்தப்பெண்கள் மத்தியிலிருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்றார்.

ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் இன்றைக்கு திண்டாடிக் கொண்டிருப்பதற்கு முழுக்க முழுக்க ஆட்சி யாளர்களின் மோசமான பொருளாதாரக் கொள்கை களே நேரடி அடிநாதக் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, மத்தியி லுள்ள மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கை

கள் இந்தத் நாட்டின் மதச்சார்பின்மையையும், மகத்தான ஜனநாயகத்தை யும் எல்லா வற்றிற்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுவதோடு, இளைஞர்க ளுக்குத் தேவையான புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கவும் முற்றிலுமாக மறுத்து வருவதாக அவர் விமர்சித்தார்.இந்த ஆபத்தான சூழ்நிலையைப் பொதுமக்களும், வணிகப் பெருமக்களும் தெளிவாகப் புரிந்து கொண்டு, ஆட்சி யாளர்களின் இத்தகைய தவறான மக்கள் விரோத

பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்து வீதிக்கு வந்து போராட முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதி நிர்வாகிகள் டி.வெங்கட், கே.செல்வானந்தம் உள்ளிட்ட ஏராள மான தோழர்களும் பொது மக்களும் வணிகர்க ளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.