தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வெட்டுப் பிரச்சனைக்கு அவசரகால அடிப்படையில் தீர்வு காண்க: தஞ்சாவூரில் உ.வாசுகி பேட்டி

20 Jun 2026, 10:14 pm
மின்வெட்டுப் பிரச்சனைக்கு அவசரகால  அடிப்படையில் தீர்வு காண்க: தஞ்சாவூரில் உ.வாசுகி பேட்டி
<p><strong>மின்வெட்டுப் பிரச்சனைக்கு அவசரகால அடிப்படையில் தீர்வு காண்க: தஞ்சாவூரில் உ.வாசுகி பேட்டி</strong></p><p>​​​​​​​தஞ்சாவூர், ஜூன் 20- மின்வெட்டுப் பிரச்சனையைத் தமிழக அரசு அவசரகாலப் பிரச்சனை யாகக் கருதி, மின் துறையில் போது மான ஊழியர்களை உடனடியாக நிய மித்துத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்துத் தஞ்சாவூரில் ஜூன் 19 அன்று நடைபெற்ற சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டால ருக்கும் மேலாகக் குறைந்துள்ளது. உலக சந்தையில் விலை கூடும்போ தெல்லாம் பெட்ரோல், டீசல் விலை யை உடனடியாக உயர்த்தும் ஒன்றிய அரசு, தற்போது விலை குறைந்துள்ள சூழலில் அதன் பலனை மக்களுக்கு வழங்க மறுக்கிறது என்றார். ஒன்றிய அரசு சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வற்புறுத்தி னார். மேலும், கிராமப்புறப் பொருளாதா ரத்தின் முதுகெலும்பாக விளங்கிய 100 நாள் வேலைத் திட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘விபிஜி ராம்ஜி’ என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் குறிப் பிட்ட அவர், இப்புதிய திட்டத்தில் பழைய சட்டத்தில் இருந்த வேலைப் பாதுகாப்போ அல்லது கூலி உத்தரவா தமோ இல்லாததால் கிராமப்புறப் பொ ருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சிய டைந்து வருகிறது என வேதனை தெரிவித்தார். எனவே, பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வந்து அதனை மேம் படுத்திட வேண்டும் என்றார். கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொ குப்புகள் அனைத்தும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானது என்று சாடிய அவர், இந்தத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய்வதிலும், பழைய 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதிலும் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தித் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.